'தி லெஜெண்ட்' படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி வெளியானது! கண்டிப்பா இந்த சர்பிரைஸ் தேதியை எதிர்பார்த்திருக்க மாட்டீங

First Published | Mar 2, 2023, 8:13 PM IST

தி லெஜண்ட் திரைப்படம் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் எப்போது ரிலீஸ் ஆக உள்ளது? என்பது குறித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது.
 

The Legend Movie Review

சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனத்தின் உரிமையாளரான லெஜென் சரவணன், கடந்த ஆண்டு நடிகராக அவதாரம் எடுத்தார். இவருடைய விளம்பரங்களை தொடர்ந்து இயக்கி வந்த ஜெடி- ஜெர்ரி இயக்கத்தில் இவர் நடித்த 'தி லெஜன்ட்' திரைப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றாலும், வசூல் ரீதியாக எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறவில்லை.
 

மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இந்த படத்தில், லெஜென் சரவணனுக்கு ஜோடியாக பிரபல பாலிவுட் நடிகை ஊர்வசி ரவுத்தாலே நடித்திருந்தார். மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் ரோபோ சங்கர், தேவதர்ஷினி, விவேக் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

Breaking: நடிகை சுஷ்மிதா சென்னுக்கு மாரடைப்பு..! அவரின் தற்போதைய நிலை குறித்து வெளியான பரபரப்பு தகவல்..!
 

Tap to resize

பொதுவாக முன்னணி நடிகர்கள் நடித்த திரைப்படங்கள், மற்றும் ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்படும் திரைப்படங்கள் திரையரங்கில் வெளியான ஒரு மாதத்திற்கு பிறகு, ஓடிடி தளத்தில் வெளியாவது வழக்கமான ஒன்றாக இருக்கும் நிலையில், இந்த திரைப்படம் வெளியாகி ஆறு மாதங்களுக்கு மேலாகியும், ஓடிடி தளத்தில் வெளியாகாமல் இருந்தது.
 

ரசிகர்கள் பலர் தொடர்ந்து எப்போது 'தி லெஜெண்ட்' திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியாகும் என தொடர்ந்து கேள்வி எழுப்பி வந்த நிலையில், சமீபத்தில் இப்படத்தின் உரிமையை டிஸ்னி ஹாட் ஸ்டார் தளம் கைப்பற்றி உள்ளதாகவும், விரைவில் இப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்து அறிவிப்பு வெளியாகும் என தெரிவிக்கப்பட்டது.

டீப் நெக் ஜாக்கெட்டில்... முன்னழகை பங்கமாக காட்டி பதறவைத்த ஸ்ரேயா சரண்..! எல்லை மீறிய ஹாட் போட்டோ ஷூட்!

இந்நிலையில் சற்று முன்னர் 'தி லெஜென்' சரவணன் திரைப்படம் நாளை 3.3.2003 அன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாளைய தினம் வெளியாக உள்ளதாக வெளியாகி உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் விதமாக அமைந்துள்ளது. 

Latest Videos

click me!