சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ஸ்டைல், 80 , 90 ரசிகர்களை தொடர்ந்து, தற்போதைய இளம் ரசிகர்களாலும் அதிகம் ரசிக்கப்பட்டு வருகிறது. திரையுலகில் இவரை அன்று முதல் இன்று வரை நிலை நிறுத்திக்கொள்ள உதவியதும் இவரது தனி ஸ்டைல் தான்.
கண்டக்டர் வேலை செய்தத, முதல் சினிமாவில் கால் பதிந்து வெற்றி நடை போட்டது வரை என, இவருடைய பழைய புகைப்படங்களில் கூட தனித்துவமான ஸ்டைலை நாம் பார்க்க முடியும்.
குறிப்பாக, படையப்பா படத்தில் ரம்யா கிருஷ்ணன் கூறுவது போல்... "வயசானாலும் உன்னோட அழகும் ஸ்டைலும்... அப்படியே தான் இருக்கு என்கிற வசனம் இவருக்கு தான் நச்சுனு பொருந்தும்".
70 வயதிலும் ஹீரோயனாக நடித்து, நயன்தாராவுடன் 'அண்ணாத்த' படத்தில் டூயட் பாடியுள்ள ரஜினிகாந்த். இந்த படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அக்டோபர் 4 ஆம் தேதி வெளியாக உள்ளது. சுமார் 26 ஆண்டுகள் கழித்து தற்போது தான் தலைவரின் படம், தீபாவளிக்கு ரிலீஸ் ஆகிறது. எனவே இதனை கொண்டாட ரசிகர்களும் தயாராகி வருகிறார்கள்.
அதே நேரம், திடீர் என நேற்று முன்தினம் மாலை ரஜினிகாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து நேற்று கூறி இருந்த சௌந்தர்யா ரஜினிகாந்த், அப்பாவின் உடல்நிலை தேறி வருகிறது. கடவுள் அருளாலும், அனைவரின் பிரார்த்தனையாலும் அப்பா நன்றாக உள்ளார். அதே நேரத்தில் புனித் ராஜ்குமார் மரண செய்தியால் மனம் இரண்டாக உடைந்துவிட்டது, அவரது ஆன்மா சாந்தி அடையட்டும் என்று தெரிவித்திருந்தார்.
ரஜினிகாந்த் உடல்நிலை தேறி வருவதாக இவர் கூறியது ரஜினி ரசிகர்களை நிம்மதியடைய செய்தது. தற்போது ரஜினி ரசிகர்கள், தலைவரின் புகைப்படத்துடன் அவருடைய பேரனின் லேட்டஸ்ட் புகைப்படத்தை வெளியிட்டு, வைரலாகி வருகிறார்கள்.
தலைவர் இளம் வயதில் கையில் பின்னால் கட்டி கொண்டு நிற்பது போலவே, அவரது மூத்த பேரன் லிங்கா நிற்கிறார். அதே ரத்தம் அப்படி தான் இருக்கும்., கைய்ய பின்னாடி கட்டிகிட்டு நிக்கிற ஸ்டைல் என பதிவிட்டுள்ளனர். இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.