பிரபலங்கள் மற்றும் அவர்களது பிள்ளைகள் எது செய்தாலும் அது வைரலாகி விடுகிறது. அதிலும் அந்த நடிகை அரசியல்வாதி என்றால் சொல்லவே வேண்டாம்.
பிரபல நடிகையும், எம்.எல்.ஏ-வுமான ரோஜா - இயக்குனர் செல்வமணியின் மகள் அன்ஷுமாலிகா தான் சமூக வலைதளத்தில் ரசிகர்களுடன் கலந்துரையாடியுள்ளார்.
சிறிய பிள்ளையாக ஐயூர்ந்த இவர், தற்போது டீன் - ஏஜ் பெண்ணாக இருப்பதால், அம்மாவை போல் இவரும் திரைப்படங்களில் நடிக்க வருவாரா? என்கிற கேள்வி சமீப காலமாகவே அதிகம் கிசுகிசுக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இவர் நேரடியாக ரசிகர்களுடன் பேசிய போது, இவர் ரசிகர்கள் கேட்ட பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார்.
குறிப்பாக... சினிமாவில் நடிப்பீர்களா? என்று கேட்ட கேள்விக்கு... தனக்கு தெரியாது என மனதில் பட்ட பதிலை வெளிப்படையாக கூறியுள்ளார்.
அதே போல், ஒரு ரசிகர் ஐ லவ் யூ என கூறியதற்கு, சற்றும் பதற்றம் அடையாமல் ஸ்பானிஷ் மொழியில் ஐ லவ் யூ என தன்னுடைய அன்பை வெளிப்படுத்தும் விதமாக கூறி அசால்ட் செய்துள்ளார்.