கலக்கப்போவது யார் காமெடியன் முதல் அம்பி பட கதாநாயகன் வரை... அசத்திய ரோபோ சங்கர்

Published : Sep 18, 2025, 10:07 PM IST

The evolution of Robo Shankar : பிரபல காமெடி நடிகர் ரோபோ சங்கர், சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்து 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தார். சமீபத்தில் உடல்நலம் குன்றி மீண்டு வந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

PREV
15

தமிழ் திரைத்துறையின் பிரபலமான காமெடி நடிகர், மேடை சிரிப்புரைஞர் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளர். அவர் முதலில் மேடை கலைஞராகத் தொடங்கி, சின்னத்திரை மூலம் புகழ் பெற்று, பின்னர் வெள்ளித்திரைக்கு நுழைந்தவர். விஜய் டிவியில் கலக்கப் போவது யாரு, அது இது எது போன்ற நிகழ்ச்சிகளில் காமெடியனாக கலக்கியவர் தான் ரோபோ சங்கர்.

25

இதையடுத்து தனுஷின் மாரி படம் மூலம் திரையுலகில் காமெடியனாக அறிமுகமாகி கலக்கினார் ரோபோ சங்கர். மாரி திரைப்படம் அவரது திரைப்பட வாழ்க்கையில் மைல்கல். இதில் தனுஷுடன் இணைந்து காமெடி கதாபாத்திரத்தில் நடித்த அவர், ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றார். இந்தப் படம் அவரை தமிழ் திரைத்துறையின் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவராக உயர்த்தியது.

35

அதன்பின்னர் அவருக்கு சினிமாவில் பட வாய்ப்புகள் குவிந்ததால் சின்னத்திரை நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளாமல் இருந்தார். 100-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளார். பல படங்களில் காமெடியனாக கலக்கி வந்த ரோபோ சங்கர் "அம்பி" என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். இந்த திரைப்படம் 2025 ஆம் ஆண்டு வெளியானது. பாஸ்சர் ஜே. எல்வின் இந்த திரைப்படத்தை இயக்கியுள்ளார். அஸ்வினி சந்திரசேகர் கதாநாயகியாக நடித்துள்ளார்.

45

கஞ்சா கருப்பு, இமான் அண்ணாச்சி, ரமேஷ் கண்ணா மற்றும் மோகன் வைத்யா போன்றோரும் இந்த படத்தில் நடித்துள்ளனர். இதனிடையே கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் அவருக்கு மஞ்சள் காமாலை வந்து படுத்த படுக்கையானார். அதுமட்டுமின்றி குடிக்கு அடிமையாகி இருந்ததால் அவர் உடல்நலமும் பாதிக்கப்பட்டு, மெலிந்து போனார்.

சென்னையில் கௌதம் வாசுதேவ் மேனன், தர்ஷன், ரோபோ சங்கர் ஆகியோர் நடிக்கும் காட்ஸ்ஜில்லா என்ற புதிய படத்தின் படப்பிடிப்பு நேற்று முன்தினம் பூஜையுடன் தொடங்கியது.

55

முதல் நாள் படப்பிடிப்பில் இருந்தபோது நீர்ச்சத்து குறைபாடு மற்றும் குறைந்த ரத்த அழுத்தம் காரணமாக மயங்கி உள்ளார் என கூறப்படுகிறது.

இதனை ஒட்டி சென்னை சாலிகிராமத்தில் உள்ள சூர்யா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுள்ளார். இதனை அடுத்து உடனடியாக துரைப்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு தற்போது அங்கு அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்

Read more Photos on
click me!

Recommended Stories