BiggBoss Thamarai: அப்பட்டமாக பொய் சொல்லி சிக்கிய தாமரை! புகைப்படம் வெளியிட்டு அசிங்கப்படுத்திய நெட்டிசன்கள்!

Published : Dec 18, 2021, 11:34 AM IST

பிக்பாஸ் வீட்டில் (Bioggboss house) தற்போது போட்டியாளர்களில் ஒருவரான, தாமரை (thamarai Selvi) பொய் சொல்லி சிக்கியதற்கான ஆதாரத்தை அப்பட்டமாக வெளியிட்டு நெட்டிசன்கள் அவரது முகத்திரையை கிழித்து தொங்க விட்டு வருகிறார்கள்.  

PREV
18
BiggBoss Thamarai: அப்பட்டமாக பொய் சொல்லி சிக்கிய தாமரை! புகைப்படம் வெளியிட்டு அசிங்கப்படுத்திய நெட்டிசன்கள்!

பிக்பாஸ் நிகழ்ச்சியை பொறுத்தவரை, மிகவும் வெளிப்படையாக போட்டியாளர்கள் கேமரா முன்னிலையில் விளையாடுவதால், அவர்கள் என்ன பொய் சொன்னாலும் நெட்டிசன்கள் உடனே கண்டு பிடித்து விடுகிறார்கள்.

 

28

அந்தவகையில் ஏற்கனவே கடந்த 4 சீசன்களில் பொய் சொல்லி நெட்டிசன்களிடம் சிக்கியவர்கள் பலர் உள்ளனர். அப்படி தான் தற்போது தாமரை வசமாக சிக்கியுள்ளார்.

 

38

பிக்பாஸ் வீட்டிற்குள் வந்ததில் அப்பாவி போட்டியாளராக பார்க்கப்பட்ட தாமரை, பிரச்சனைகள் சூடு பிடிக்க துவங்கிய பின்னர் தன்னுடைய சுய ரூபத்தையும் காட்டி வருகிறார்.

 

48

அதே நேரத்தில், மனதில் பட்டத்தை வெடுக் வெடுக் என இவர் பேசி வருவதால் இவருக்கு ஆதரவுகளும் கூடி வருகிறது. போட்டி என்று வந்து விட்டால்... புலியாக மாறி திறமையை வெளிப்படுத்தி வருகிறார்.

 

58

அந்த வகையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நேற்றைய எபிசோடில் புளு மற்றும் சிகப்பு ஆகிய இரண்டு அணிகளுக்கு இடையே சமையல் போட்டி வைக்கப்பட்டது. இந்த சமையல் போட்டியில் புளூ டீம் வெற்றி பெற்றதாக நடுவர் குழு அறிவித்தது.

 

68

இதனால் வெற்றி பெற்ற புளூ டீம் அணியில் இருந்த தாமரை, அக்சரா, சிபி மற்றும் அபினய் ஆகியோர்களுக்கு கேஸ் ஸ்டவ் பரிசாக வழங்கப்படுவதாக பிக்பாஸ் அறிவித்தார். இந்த அறிவிப்பைக் கேட்டவுடன் ’எங்க வீட்டில் அடுப்பு இல்லை’ என தாமரை துள்ளிக்குதித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

 

78

ஆனால் உண்மையில் தாமரையின் வீட்டில் கேஸ் அடுப்பு உள்ளது என்றும், அவர் பொய் சொல்கிறார் என அவரது புகைப்படத்தை வெளியிட்டு நெட்டிசன்கள் கூறி வருகிறார்கள்.

 

88

நெட்டிசன்கள் வெளியிட்டுள்ள தாமரையின் பழைய புகைப்படத்தில், புத்தம் புதிய கேஸ் ஸ்டவ் முன்பு தான் தாமரை நிற்கிறார். எனவே இதற்காக கூட ஏன்? இப்படி தாமரை பொய் சொல்ல வேண்டும் என அசிங்கப்படுத்தும் விதமாக கேள்வி எழுப்பி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Read more Photos on
click me!

Recommended Stories