அனிருத்திற்கு தெலுங்கு சினிமாவில் அதிக வாய்ப்பு கிடைக்கின்றன. ஆனால் அவர் படத்திற்காக வேலை செய்யவில்லை பணத்திற்காகவே வேலை செய்கிறார் என்பது போன்று பேசி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.
தெலுங்கு சினிமா துறையில் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக இருப்பவர் தான் தமன். இவர் தெலுங்கு சினிமா மட்டுமின்றி, தமிழ் சினிமாவிலும் ஒரு சில படங்களுக்கு இசையமைத்துள்ளார். இவர் பல ஹிட் பாடல்களை கொடுத்து ரசிகர் மத்தியில் நீங்க அதை இடத்தை பிடித்தவர்.
தமன் தமிழ் சினிமாவில் விஜய்யின் மிகப்பெரிய தீவிரமான ரசிகர். விஜய்யின் படத்திற்கு இசையமைக்க வாய்ப்பு எனக்கு கிடைக்க வேண்டும் என்று வெகு நாளாக ஆசைப்பட்டு கொண்டிருந்தேன் என்று ஒரு பேட்டியில் கூறியிருந்தார். அது போலவே அவருக்கு வாரிசு படத்தில் இசையமைக்கும் வாய்ப்பு கிடைத்தது. இந்தப் படத்தில் இடம் பெற்ற பாடல்கள் ஹிட் பாடல்களாகவே அமைந்தன.
24
ரஞ்சிதமே
அதில் குறிப்பாக "ரஞ்சிதமே" என்னும் பாடல் இவருக்கு பெரும் வரவேற்பையும் ரசிகர் மத்தியில் நீங்காத இடத்தையும் பெற்று தந்தது. தெலுங்கு சினிமாவில் ஓ ஜி மற்றும் அகண்டா 2 என்னும் படங்களுக்கு இவர் இசையமைத்து பெரும் வெற்றி படத்தை பெற்று தந்தது. பாடல்கள் அனைத்தும் ஹிட் அடித்தது. தற்போது விஜயின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கி வரும் சிம்மா படத்திற்கு தமன் தான் இசையமைத்து வருகிறார்.
34
தமனின் போட்டி:
தமனிடம் திரையுலகத்தை பற்றி கேள்வி எழுப்பிய போது அவர் போது தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி பேசியது இப்போது சர்ச்சையாக மாறி வருகிறது. இந்த நிலையில் தெலுங்கு சினிமாவில் பல இயக்குனர்கள் பணத்திற்காகவே வேலை செய்ய வருகிறார்கள் அதனை தயாரிப்பாளர்களும் வரவேற்கிறார்கள் என்று தனது சர்ச்சையான பேச்சை முன் வைக்கிறார். ஆனால் தமிழில் அப்படி இல்லை. தமிழில் ஒற்றுமை இருக்கிறது. பிறமொழி இயக்குனர்களை தமிழில் ஒருபோதும் அரவணைப்பதில்லை.
44
எளிதாக கிடைக்கப்பட்ட வாய்ப்பு:
அனிருத்துக்கு தெலுங்கு சினிமாவில் எளிதாக வாய்ப்பு கிடைக்கிறது. ஆனால் எனக்கு தமிழ் சினிமாவில் வாய்ப்பு கிடைக்கவில்லை. தமிழில் ஒற்றுமை இருக்கிறது ஆனால் தெலுங்கில் இல்லை என்றெல்லாம் கூறியுள்ளார்.
சர்ச்சையான பேச்சு:
அனிருத் பணத்திற்காகவே இசை அமைக்கிறார். ஆனால் படத்திற்காக இசையமைக்கவில்லை என்பது போன்று பேசி சர்ச்சையில் சிக்கியிருக்கிறார்.