பீஸ்ட் படத்தின் தோல்விக்கு பின்னர் நெல்சன் இயக்கிய திரைப்படம் தான் ஜெயிலர். ரஜினிகாந்த் நாயகனாக நடித்த இத்திரைப்படம் நேற்று உலகமெங்கும் பிரம்மாண்டமாக ரிலீஸ் ஆனது. பக்கா தலைவர் படமாக எடுத்துள்ளதாக ரஜினி ரசிகர்கள் நெல்சனை பாராட்டி வருகின்றனர். அதுமட்டுமின்றி உலகளவில் வசூலையும் வாரிக்குவித்து வருகிறது ஜெயிலர் திரைப்படம். இதனால் நெல்சன், ரஜினிகாந்த் உள்பட படக்குழுவினர் செம்ம குஷியில் உள்ளனர்.
இந்த நிலையில், ஜெயிலர் படத்திற்கு நன்கு வரவேற்பு கிடைத்து வருவதை அறிந்த நடிகர் விஜய், நெல்சனுக்கு செல்போனில் தொடர்பு கொண்டு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். நெல்சன் இதற்கு முன்னர் விஜய்யை வைத்து இயக்கிய பீஸ்ட் திரைப்படம் தோல்வியை சந்தித்தாலும் நெல்சன் மீதுள்ள நட்பின் காரணமாக அவருக்கு போன் போட்டு வாழ்த்துக்களை தெரிவித்திருக்கிறாராம் தளபதி. அவரின் இந்த செயலுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
இதையும் படியுங்கள்... தியேட்டர்களை ஆக்கிரமித்த ஜெயிலர்... இந்த வாரம் ஓடிடியில் வரிசைகட்டி ரிலீஸ் ஆன தமிழ் படங்களின் லிஸ்ட் இதோ
ஜெயிலர் திரைப்படம் உருவாக முக்கிய காரணமாக இருந்ததே விஜய் தான். பீஸ்ட் ஷூட்டிங்கின் போது, ரஜினிக்கு கதை சொல்லுமாறு நெல்சனுக்கு ஊக்கம் அளித்து அவரை அனுப்பி வைத்ததே விஜய் தானாம். இதை நெல்சனே ஜெயிலர் ஆடியோ லாஞ்சில் கூறி இருந்தார். அதுமட்டுமின்றி, எப்பவும் காலையில் லேட் ஆக எழுந்திருக்கும் நெல்சனை, ஜெயிலர் படத்தின் முதல்நாள் ஷூட்டிங்கிற்கு போன் போட்டு எழுப்பிவிட்டதே தளபதி தான்.