விஜய்யின் வாரிசு படத்தை பொறுத்தவரை இப்படத்தின் தமிழ்நாடு உரிமை மட்டும் சுமார் 70 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டு உள்ளது. விஜய்க்கு தமிழ்நாடு தவிர கேரளா, கர்நாடகா, ஆந்திராவிலும் அதிகளவிலான ரசிகர் படை இருப்பதால், அங்கும் வாரிசு படம் அதிக விலைக்கு விற்பனை ஆகி உள்ளது. அதன்படி இப்படத்தின் கேரள வெளியீட்டு உரிமை ரூ.6.5 கோடிக்கும், கர்நாடகா உரிமை ரூ.7.5 கோடிக்கும் விற்கப்பட்டுள்ளது.