நடிகர் விஜய் நடிப்பில் ரிலீஸ் ஆகாமல் கிடப்பில் போடப்பட்டு இருந்த ஜனநாயகன் திரைப்படம் திருட்டுத்தனமாக பைரசி தளங்களில் வெளியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ் சினிமாவில் மிகப்பெரிய நட்சத்திர பட்டாளத்தை கொண்ட நடிகர்களில் தளபதி விஜய்யும் ஒருவர். கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக சினிமாவில் முன்னணி மாஸ் ஹீரோவாக கோலோச்சி வந்த விஜய், கடந்த ஆண்டு, தான் சினிமாவை விட்டு விலக உள்ளதாக அறிவித்தார். முழு நேர அரசியலில் ஈடுபட உள்ளதால், சினிமாவுக்கு முழுக்கு போடுவதாக விளக்கம் அளித்திருந்தார். அதுமட்டுமின்றி தன்னுடைய கடைசி படம் ஜனநாயகன் தான் என்றும் திட்டவட்டமாக கூறி இருந்தார். இந்த அறிவிப்பு வெளியான நாளில் இருந்தே ஜனநாயகன் படத்தின் மீதான எதிர்பார்ப்பு உச்சத்துக்கு சென்றது.
27
விஜய்யின் ஜனநாயகன்
ஜனநாயகன் திரைப்படத்தை எச்.வினோத் இயக்கி இருக்கிறார். இது தெலுங்கில் பாலகிருஷ்ணா நடிப்பில் வெளியாகி ஹிட் அடித்த பகவந்த் கேசரி திரைப்படத்தை தழுவி எடுக்கப்பட்டு உள்ளது. இப்படத்தை கேவிஎன் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்து இருந்தது. இப்படத்தில் நடிகர் விஜய் உடன் பூஜா ஹெக்டே, பிரகாஷ் ராஜ், பிரியாமணி, கெளதம் மேனன், மமிதா பைஜு, நிழல்கள் ரவி என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருக்கிறது. விஜய்யின் ஃபேவரைட் இசையமைப்பாளரான அனிருத் தான் இப்படத்திற்கு இசையமைத்து உள்ளார். இதில் இந்தி நடிகர் பாபி தியோல் வில்லனாக நடித்திருக்கிறார்.
37
தள்ளிப்போன ஜனநாயகன்
ஜனநாயகன் திரைப்படம் கடந்த ஆண்டு தீபாவளிக்கே திரைக்கு வர இருந்தது. ஆனால் கடைசி நேரத்தில் அப்படத்தின் ரிலீஸ் தேதியை இந்த ஆண்டு பொங்கலுக்கு தள்ளிவைத்தனர். அதன்படி ஜனவரி 9ந் தேதி ஜனநாயகன் திரைப்படம் தியேட்டர்களில் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இதற்கான டிக்கெட் முன்பதிவெல்லாம் தொடங்கி படுஜோராக நடைபெற்றது. முன்பதிவிலேயே 100 கோடிக்கு மேல் வசூலை வாரிக்குவித்து இருந்தது ஜனநாயகன். இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளிலும் ஜனநாயகன் திரைப்படத்திற்கு மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பு இருந்து வந்தது.
ஆனால் யாரும் எதிர்பார்க்காத விதமாக ஜனநாயகன் படத்தின் ரிலீசுக்கு சென்சார் போர்டு மூலம் சிக்கல் ஏற்பட்டது. அப்படத்திற்கு சென்சார் சான்றிதழ் கொடுப்பதில் இழுபறி நீடித்ததால், படக்குழு நீதிமன்றத்தை நாடியது. இதனால் பிரச்சனை பெரிதாக ஜனநாயகன் படம் பொங்கல் ரேஸில் இருந்து விலகும் சூழல் உருவானது. பின்னர் நீதிமன்றம் வழக்கு விசாரணையை இழுத்தடித்ததால், ஜனநாயகன் படம் அப்படியே முடங்கியது. இதனால் வேறுவழியின்றி வழக்கை வாபஸ் வாங்கிய படக்குழு, படத்தை மறுதணிக்கை செய்ய அனுப்பியது. அதற்குள் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் ஜனநாயகன் அப்படியே முடங்கிப்போனது.
57
லீக் ஆன ஜனநாயகன்
தற்போது விஜய் தேர்தல் பணிகளில் பிசியாக இருப்பதால், இந்த தேர்தல் முடிந்த கையோடு அவர் ஜனநாயகன் திரைப்படத்தை திரைக்கு கொண்டு வர திட்டமிட்டு இருப்பதாக பேச்சு அடிபட்டு வந்தது. இதனால் சந்தோஷத்தில் இருந்த ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியை கொடுக்கும் விதமாக ஒரு சம்பவம் அரங்கேறி இருக்கிறது. அது என்னவென்றால், யாரும் எதிர்பாராத விதமாக ஒட்டுமொத்த ஜனநாயகன் திரைப்படத்தையும் திருட்டுத்தனமாக பைரசி தளங்களில் வெளியிட்டு இருக்கிறார்கள். அதை வீடியோ எடுத்து சிலர் சமூக வலைதளங்களிலும் அதிகளவில் ஷேர் செய்து வருகிறார்கள்.
67
யார் பார்த்த வேலை?
தயவு செய்து யாரும் ஜனநாயகன் பட காட்சிகளை பகிர வேண்டாம் என்றும், அதையும் மீறி பகிர்ந்தால் கைது நடவடிக்கை கூட எடுக்கப்பட வாய்ப்பு இருப்பதாகவும் பிரபல சினிமா விமர்சகர் பிரசாந்த் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். ஜனநாயகன் படத்தை இதுவரை தணிக்கை குழுவினர் மட்டுமே பார்த்திருக்கும் நிலையில், ஒட்டுமொத்த படமும் எப்படி லீக் ஆனது என்பது மிகப்பெரிய கேள்வியாக உள்ளது. விஜய்யின் அரசியல் எதிரிகள் யாரேனும் பார்த்த வேலையாக இருக்கும் என நெட்டிசன்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். இது விஜய்க்கு எதிராக திட்டமிட்டு நடத்தப்படும் சதி எனவும் அவரது ரசிகர்கள் ஆதங்கத்தை கொட்டி வருகின்றனர். மறுபுறம் விஜய்யே இதை லீக் பண்ணியிருக்கலாம் என சிலர் எதிர் கருத்து கூறி வருகின்றனர்.
77
500 கோடிக்கு ஆப்பு
ஒட்டுமொத்த படமும் லீக் ஆகி இருப்பதால், விஜய்யின் தலைவா படத்துக்கு ஏற்பட்ட நிலைமை ஜனநாயகனுக்கும் ஏற்பட்டுவிடுமோ என்கிற அச்சத்தில் ரசிகர்கள் உள்ளனர். தலைவா படம் தமிழ்நாட்டில் ரிலீஸ் ஆகும் முன்னரே திருட்டி சிடிகள் மூலம் லீக் ஆனது. அதுவே அப்படத்தின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது. அதேபோல் ஒரு சூழல் ஜனநாயகன் படத்துக்கும் வந்துவிடுமோ என ரசிகர்கள் அஞ்சுகின்றனர். இப்படம் சுமார் 500 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக எடுக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.