யார் இந்த சூரியகலா? கார்த்திக்கின் பரம எதிரி ரியா மீண்டும் வந்தாச்சு! கார்த்திகை தீபம் அதிரடி திருப்பம்!

Published : Apr 09, 2026, 08:10 PM IST

Karthigai Deepam serial Riya Re entry as Suriyakala : கார்த்திகை தீபம் சீரியலில் கார்த்திக்கை பழி தீர்க்க ரியா இப்போது சூரியகலாவாக மறு அவதாரம் எடுத்து வந்துள்ளார்.

PREV
16
கார்த்திகை தீபம் சீரியல் ரியா

ரசிகர்களுக்கு பிடித்தமான சீரியல்களில் ஒன்று தான் கார்த்திகை தீபம் சீரியல். ஒவ்வொரு நாளும் புரோமோ வெளியாகும் போது சீரியலைப் பற்றி ரசிகர்கள் விமர்சிப்பதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். அந்த வகையில் தான் கார்த்திகை தீபம் சீரியலின் முதல் பாகத்தில் தனது அண்ணன் ஆனந்தை 2ஆவதாக யாருக்கும் தெரியாமல் திருமணம் செய்து கொண்டு வீட்டிற்கு வந்த ரியாவின் உண்மை முகத்திரையை கார்த்திக் கிழித்தெறிந்து அவரை வீட்டை விட்டு துரத்தியடித்தார்.

26
கார்த்திகை தீபம் இன்றைய எபிசோ

அப்போதுதான் ரியா தான் வைத்திருந்த கை துப்பாக்கியால் சுட்டதில் கார்த்திக்கின் அம்மா அபிராமி நாச்சியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு எதுவும் ஆகாது என்று தீபா தனது தாலியை கழற்றி அவரது காலடியில் வைக்க அந்த சீரியல் பரபரப்பாக சென்றது. கடைசியாக ரியா துப்பாக்கியால் சுடப்பட்டார். இப்படியெல்லாம் காட்சிகள் அமைக்கப்பட்டிருந்தது.

36
சூரியகலா என்ட்ரி கார்த்திகை தீபம்

இந்த நிலையில் தான் இப்போது ஒளிபரப்பாகி வரும் கார்த்திகை தீபம் சீரியலின் 2ஆவது பாகம் என்று சொல்லப்படும் இந்த சீரியலில் வில்லியாக ஒரு கலக்கு கலக்கி வந்த சந்திரகலா திருப்பதிக்கு பாத யாத்திரை சென்றதாக சீரியலில் டயலாக் பேசப்பட்டது. அதோடு சரி, அடுத்து அவரது காட்சிகள் இடம் பெறவில்லை. குடும்பத்தை பிரிப்பதில் சந்திரகலா பெரும்பங்கு வகித்தார். இந்த நிலையில் ஒரு சீரியலில் வில்லி ரோல் இல்லையென்றால் எப்படி? அவருக்கு பதிலாக புதிய வில்லியாக சூரியகலா எண்ட்ரி கொடுத்தார்.

46
கார்த்திக் ராஜ் கார்த்திகை தீபம்

ரேவதிக்கு இப்போது பழைய நினைவுகள் எதுவும் ஞாபகத்தில் இல்லை என்பதால், சாமுண்டீஸ்வரி அவருக்கு 2ஆவது திருமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்தார். அதற்காக சூரியகலாவின் அண்ணனுக்கும் ரேவதிக்கும் திருமணம் செய்து வைக்க பிளான் போட்டார். அதற்காக சூரியகலாவை வீட்டிற்கு வரவழைத்தார். அவரும் வரும் போது ரேவதிக்கு என்று புதிதாக மொபைல் போன் ஒன்றை வாங்கி வந்தார்.

56
Karthigai Deepam serial today episode highlights

பின்னர், சாமுண்டீஸ்வரி தனக்கு நடந்த எல்லாவற்றையும் சொல்லவே யார் அவன் என்று சூரியகலா கேட்க, அப்போதுதான் சாமுண்டீஸ்வரி கார்த்திக்கின் போட்டோவை காண்பித்தார். இதைப் பார்த்து ஷாக்கான சூரியகலா தன்னை எப்படியெல்லாம் சித்திரவதை செய்தான் என்பதை பிளாக்பேக் சீனாக சூரியகலா சாமுண்டீஸ்வரியிடம் கூறினார். எப்படியாவது அவனை பழி வாங்க வேண்டும் என்று காத்துக் கொண்டிருந்தேன். அதற்கான சந்தர்ப்பமாக இந்த வாய்ப்பு கிடைத்திருக்கிறது என்றார்.

66
Karthigai Deepam serial Riya re-entry as Suriyakala

அதற்கு சாமுண்டீஸ்வரியும் எனக்கு நீதான் உதவி செய்ய வேண்டும். உன்னை தான் நான் முழுவதுமாக நம்பியிருக்கிறேன் என்றார். இதுவரையில் இந்த சீரியலில் சந்திரகலாவின் வில்லத்தனத்தை பார்த்தோம். இனிமேல் சூரியகலாவாக எண்ட்ரி கொடுத்திருக்கும் ரியாவின் வில்லத்தனத்தை பார்க்கலாம். ஆனால், ரியாவையே சமாளித்த கார்த்திக்கிற்கு சூரியகலா சும்மா பெரிய வில்லியாக இருக்க மாட்டார் என்று தெரிகிறது. சூரியகலாவின் வில்லத்தனம் சீரியலின் டிஆர்பியை எப்படி உயர்த்துகிறது என்று பார்க்கலாம். அதோடு சூரியகலாவின் அண்ணனாக யார் வருவார் என்ற எதிர்பார்ப்பும் நிலவுகிறது.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Photos on
click me!

Recommended Stories