மீண்டும் சன் டிவியிடம் சரண்டர் ஆன விஜய்; ஜன நாயகன் இப்போ கலாநிதி மாறன் கையில்!

Published : Apr 02, 2025, 12:45 PM ISTUpdated : Apr 02, 2025, 12:47 PM IST

எச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள கடைசி திரைப்படமான ஜன நாயகன் படத்தின் சாட்டிலைட் உரிமையை சன் டிவி பெரும் தொகை கொடுத்து வாங்கி உள்ளதாம்.

PREV
14
மீண்டும் சன் டிவியிடம் சரண்டர் ஆன விஜய்; ஜன நாயகன் இப்போ கலாநிதி மாறன் கையில்!

Jana Nayagan Movie TV Rights Sold to Sun TV : விஜய் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் படம் ஜன நாயகன். இப்படத்தை எச்.வினோத் இயக்குகிறார். இப்படத்தில் நடிகர் விஜய்யுடன் பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, பாபி தியோல், கெளதம் மேனன், பிரியாமணி, பிரகாஷ் ராஜ் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறது. யாஷின் டாக்ஸிக் படத்தை தயாரிக்கும் கேவிஎன் நிறுவனம் தான் இப்படத்தையும் தயாரிக்கிறது. இப்படத்திற்கு ராக்ஸ்டார் அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது.

24

விஜய்யின் கடைசி படம் ஜன நாயகன்

ஜன நாயகன் திரைப்படம் தான் நடிகர் விஜய்யின் கடைசி படம். இப்படத்தில் நடித்து முடித்த கையோடு அரசியலில் இறங்க உள்ளார் விஜய். இதற்காக அவர் தமிழக வெற்றிக் கழகம் என்கிற அரசியல் கட்சியை தொடங்கி உள்ளார். அக்கட்சி தொடங்கப்பட்டு ஓராண்டு நிறைவடைந்த நிலையில், அண்மையில் இரண்டாம் ஆண்டில் காலடி எடுத்து வைத்தது. தமிழக வெற்றிக் கழகம் சார்பாக விஜய் நடத்திய மாநாட்டிலும் சரி, அண்மையில் நடந்து முடிந்த அக்கட்சியின் பொதுக்குழுவிலும் சரி, அவர் தங்களது எதிரி திமுக தான் என்று ஆணித்தரமாக அறிவித்தார்.

இதையும் படியுங்கள்... ஜன நாயகன் பட OTT உரிமையை போட்டிபோட்டு வாங்கிய பிரபல நிறுவனம்; அதுவும் இத்தனை கோடிக்கா?

34

சன் டிவி வசம் சென்ற ஜன நாயகன்

மேடைகளில் திமுக-வை பொளந்துகட்டிய விஜய், தற்போது அவர்களுக்கு சொந்தமான சேனலிடமே சரண்டர் ஆகி இருக்கிறார். விஜய் நடித்துள்ள ஜன நாயகன் படத்தின் தொலைக்காட்சி உரிமத்தை சன் டிவி கைப்பற்றி இருக்கிறதாம். அதுவும் சாதாரண விலைக்கு அல்ல, இதுவரை இல்லாத வகையில் அதிக தொகையாக ரூ.55 கோடிக்கு அப்படத்தை வாங்கி உள்ளதாம். இதைப்பார்த்த நெட்டிசன்கள் மேடையில் திமுக-வை பொளந்துகட்டும் விஜய் இப்போ அவர்களிடமே பிசினஸ் டீலிங் பேசி இருக்கிறாரா என ஆச்சர்யத்துடன் பார்த்து வருகின்றனர்.

44

ஜன நாயகனுக்கு காத்திருக்கும் ட்விஸ்ட்

சன் டிவி பொங்கலுக்கு வாங்கும் படங்களை அந்த ஆண்டு தமிழ் புத்தாண்டுக்கு ஒளிபரப்பிவிடும். அதேபோல் ஜன நாயகன் படமும் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு ரிலீஸ் ஆவதால், அதை தமிழ் புத்தாண்டுக்கு சன் டிவி ஒளிபரப்புவது கேள்விக்குறி தான். ஏனெனில் அடுத்த ஆண்டு அந்த சமயத்தில் தான் தமிழ்நாட்டின் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அப்போது ஒளிபரப்பினால் விஜய்க்கு பிரச்சாரம் செய்வது போல் ஆகிவிடும். அதனால் சன் டிவி அப்போது அப்படத்தை ஒளிபரப்பாது என்று நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.

இதையும் படியுங்கள்...  'ஜனநாயகன்' படத்தின் கதைக்களம் இதுவா? அரசியலுக்கு திரைப்படம் மூலம் பக்கா ஸ்கெச் போட்ட தளபதி!

Read more Photos on
click me!

Recommended Stories