ஜனநாயகன் இசை வெளியீட்டு விழாவில் மேடையில் தன் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் பேசி முடித்ததும், அவரை நோக்கி ஓடி வந்த விஜய், கட்டிப்பிடித்து தன்னுடைய அன்பை வெளிப்படுத்தி உள்ளார்.
நடிகர் விஜய்யின் ஜனநாயகன் திரைப்படம் பொங்கலுக்கு திரைக்கு வர உள்ள நிலையில், அப்படத்தின் இசை வெளியீட்டு விழா மலேசியாவில் படுஜோராக நடைபெற்றது. இந்த இசை வெளியீட்டு விழாவில் 80 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரசிகர்கள் கலந்துகொண்டனர். மலேசியாவில் உள்ள புக்கட் ஜலீல் ஸ்டேடியத்தில் நடைபெற்ற இந்த இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய்யின் நண்பர்கள், உறவினர்கள் மற்றும் பெற்றோரும் கலந்துகொண்டனர். குறிப்பாக இந்த விழாவில் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் மேடையேறி பேசி முடித்ததும் ஒரு அழகிய தருணம் அரங்கேறியது.
மலேசியாவில் உள்ள புக்கட் ஜலீல் மைதானத்தில் ஒரு புறம் மேடை அமைக்கப்பட்டிருக்க, அந்த மேடைக்கு எதிர்புரம் நடிகர் விஜய் உள்பட படக்குழுவினர் அமர்வதற்கான இருக்கைகள் போடப்பட்டு இருந்தன. மேடைக்கும் விஜய் அமர்ந்திருக்கும் இடத்திற்கும் சுமார் 100 மீட்டர் தொலைவு இருக்கும். தான் அமர்ந்திருந்த இடத்தில் இருந்து அங்கு அமைக்கப்பட்டிருந்த பிரம்மாண்ட ரேம்பில் 100 மீட்டர் தூரம் ஓடோடி வந்து தன் தந்தையை மேடையில் கட்டிப்பிடித்தார். தந்தை மீது விஜய் பாசம் காட்டியதை பார்த்து அங்கிருந்த ரசிகர்கள் ஆர்ப்பரித்தனர்.
22
தந்தை எஸ்.ஏ.சியை கட்டிப்பிடித்த விஜய்
நடிகர் விஜய்யை சினிமாவில் மெருகேற்றியவர்களில் அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகருக்கும் முக்கிய பங்கு இருக்கிறது. நாளைய தீர்ப்பு படத்தில் தொடங்கி தொடர்ச்சியாக தனது டைரக்ஷனில் விஜய்யை நடிக்க வைத்து அவரை அடுத்தடுத்த உயரத்துக்கு கொண்டு சென்றார் எஸ்.ஏ.சி. சினிமாவில் இன்று விஜய் ஆலமரமாய் வளர்ந்திருந்தாலும் அதற்கான விதை எஸ்.ஏ.சி போட்டது என்றே சொல்லலாம். இடையே விஜய்க்கும் எஸ்.ஏ.சந்திரசேகருக்கும் இடையே மனக்கசப்பு இருந்ததாக பேச்சு அடிபட்டது.
ஆனால் அதையெல்லாம் தவிடுபொடி ஆக்கும் விதமாக தன் தந்தையை கட்டிப்பிடித்து தங்களுக்குள் எந்தவித மனஸ்தாபமும் இல்லை என்பதை சூசகமாக சொல்லி இருக்கிறார் விஜய். தளபதி தன்னுடைய தந்தையை ஓடி வந்து கட்டிப்பிடித்த வீடியோவை பார்த்த ரசிகர்கள்... இவர் ஒரு மிச வச்ச குழந்தை என கமெண்ட் செய்து வருகின்றனர். ஒருசிலரோ 50 வயதிலும் இவ்வளவு வேகமா ஓடுறாரே என ஆச்சர்யத்துடன் பதிவிட்டு வருகிறார்கள். இந்த வீடியோ தான் தற்போது சோசியல் மீடியாவில் செம டிரெண்டிங்கில் உள்ளது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.