“மக்கள் திலகத்தின் மறு உருவமே”... மீண்டும் எம்.ஜி.ஆர். கெட்டப்பில் விஜய்... சர்ச்சையை கிளப்பிய போஸ்டர்...!

Published : Sep 04, 2020, 12:39 PM IST

அடுத்தடுத்து விஜய் ரசிகர்கள் ஒட்டும் போஸ்டர்கள் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.

PREV
18
“மக்கள் திலகத்தின் மறு உருவமே”... மீண்டும் எம்.ஜி.ஆர். கெட்டப்பில் விஜய்... சர்ச்சையை கிளப்பிய போஸ்டர்...!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய்க்கு ரசிகர்கள் பட்டாளம் ஏராளம். சோசியல் மீடியா ட்ரெண்டிங்கில் ஆரம்பித்து போஸ்டர்கள் ஒட்டி கொண்டாடுவது வரையிலும் அவர்களின் அட்ராசிட்டிகள் அளவில்லாமல் போய்க்கொண்டிருக்கிறது. 

28

அப்படி வித்தியாசமாக சிந்தித்து போஸ்டர் அடித்து நாரதர் கலகத்தை ஆரம்பித்து வைப்பார்கள். அவர்கள் அடிக்கும் போஸ்டர் சிரிப்பையும் வரவழைக்கும். சிந்தனையையும் தூண்டும். 

38

சமீபத்தில் விஜய் திருமண நாளை முன்னிட்டு மதுரையில் ஒட்டப்பட்ட போஸ்டர்கள் பரபரப்பை கிளப்பியது. விஜய்யை எம்.ஜி.ஆர். போலவும், சங்கீதாவை ஜெயலலிதா போலவும் சித்தரித்து சுவரொட்டிகள் ஒட்டப்பட்டது, அரசியல் வட்டாரத்தில் புகைச்சலையும் கிளப்ப்பியது. 

48

இதேபோல் மாஸ்டர் படப்பிடிப்பின் போது வருமான வரித்துறையினர் விஜய்க்கு சொந்தமான இடங்களில் ரெய்டு நடத்தினர். இதனால் கொந்தளித்த விஜய் ரசிகர்கள் தமிழகத்தின் பல இடங்களில் விதவிதமாக போஸ்டர்களை ஒட்டி தங்களது ஆதரவை வெளிக்காட்டினர். 

58

அதிலும்  குறிப்பாக நடிகர் விஜய்யுடன், ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி, தேர்தல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் பேசுவது போல் போஸ்டர் ஒட்டப்பட்டிருந்தது.  அதுமட்டுமின்றி ஆந்திராவை நாங்கள் காப்பாற்றி விட்டோம். கலங்கி நிற்கும் தமிழ்நாட்டை நீங்கள்தான் காப்பாற்ற வேண்டும். மக்கள் நலன் கருதி களமிறங்குங்கள் என்ற வாசகம் இடம்பெற்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
 
68

கடந்த ஜூன் மாதம் திண்டுக்கல்லில் ஒட்டப்பட்ட விஜய்யின் பிறந்தநாள் போஸ்டர் ஒன்று பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அந்த போஸ்டரில் நடிகர் விஜய்யுடன், அண்ணாவும், பெரியாரும் இருப்பது போல் ஒட்டப்பட்டுள்ளது. அதன் மேலே, நீங்கள் அரசியலுக்கு வந்தால் அறிஞர் அண்ணா, வராவிட்டால் பெரியார் எனும் வாசகம் இடம் பெற்றிருந்தது.

78

தற்போது 2021ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலுக்கான வேலைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றனர். இந்நிலையில் விஜய்யை அரசியலுக்கு அழைக்கும் விதமாக ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள் சர்ச்சையை கிளப்பிவிட்டுள்ளது. 

88

மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் புகைப்படங்களில் விஜய் முகத்தை ஒட்ட வைத்து போஸ்டர் அடித்துள்ளனர். மக்கள் திலகத்தின் மறு உருவமே விரைவில் வருக நல்லாசி தருக. ஆளப்போறான் தமிழன் தளபதி 2021ல்? என்ற வாசகமும் இடம் பெற்றுள்ளது. 

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories