
விஜய்யின் ஜன நாயகன் படத்தின் இசை வெளியீட்டு விழா மலேசியாவில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் படக்குழுவினர் உள்பட சினிமா பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டு விஜய்க்குஃபேர்வெல் கொடுத்தனர். வரும் ஜனவரி 9ஆம் தேதி ஜன நாயகன் திரைக்கு வரும் நிலையில் இந்தப் படத்தில் இடம் பெற்றுள்ள தளபதி கச்சேரி, ஒரு பேரே வரலாறு, செல்ல மகளே ஆகிய பாடல்களின் லிரிக் வீடியோ வெளியானது. இதில் செல்ல மகளே பாடலை விஜய் பாடியுள்ளார்.
இந்த நிலையில் தான் ஜன நாயகன் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் ஒட்டு மொத்தமாக விஜய் என்ன பேசினார் என்பது பற்றி பார்க்கலாம். சிவப்பு மஞ்சள் விளக்கு வண்ணத்துடன் ஜனநாயகன்பாட்டு ஒழிக்க மேடையில் நடந்து செல்கிறார் தளபதி விஜய். தளபதி விஜய் பேசுவதற்கு முன்னால் ரசிகர்களின் குரல் ஒலித்துக் கொண்டே இருக்கிறது. "யாரு சாமி நீங்க" இன்று சிரித்துக் கொண்டே கூறுகிறார் விஜய் அப்பொழுதும் குரல் நிற்கவில்லை மீண்டும் மீண்டும் ஒளிந்து கொண்டே இருக்கிறது .
மலேசியா மக்களுக்கு நன்றி:
என் நெஞ்சில் குடியிருக்கும் ரசிகர்களுக்கு வணக்கம் என்று தனது பேச்சை தொடங்குகிறார் விஜய். எனக்காக இவ்வளவு ஆதரவு தெரிவித்த மலேசியா மக்களுக்கு நன்றி என்று மனம் திறந்து பேசுகிறார் தளபதி விஜய்.
யாதும் ஊரே யாவரும் கேளிர்:
தமிழர்கள் அதிகம் வாழும் ஒரே ஊர் மலேசியா தான். இங்கு யார் வந்து அடைக்கலம் கேட்டாலும் தட்டாமல் தரும் ஒரே ஊரு மலேசியா. இங்கு மலேசியா காரங்க நிறைய பேரு முருகனுக்கு பால்குடம் தூக்குறாங்க. இங்கதான் சீனா காரங்கள் ரொம்ப அழகா தமிழ்ல பேசுறாங்க அது எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்துச்சு. இன்னும் அப்படியே நம்மளுடைய தமிழ் மொழிய,பண்பாட கலாச்சாரத்தை உயிரோட வச்சிருக்கவங்க நம்ம மலேசியா தமிழர்களுக்கு என் மனமார்ந்த நன்றி என்றெல்லாம் விஜய் புகழ்ந்து கூறினார். அது மட்டும் இல்லை இத்தனை வருஷமா நம்ம தமிழ் சினிமாவிற்கு நீங்கள் கொடுத்திருந்த ஆதரவு கொஞ்சம் மட்டும் இல்ல மிக அதிகமாகவே இருக்கிறது.
மலேசியாவில் எடுக்கப்பட்ட மிகப்பெரிய படம் என் நண்பர் நடித்த பில்லா தான் என்று அஜித்தை புகழ்ந்து கூறியுள்ளார். இதற்கெல்லாம் நீங்கள் சப்போர்ட் கொடுத்து இருக்கீங்க என்று மலேசியா மக்களை புகுந்து கூறியுள்ளார் விஜய். என் படமான குருவி, காவலன் சப்போர்ட் குடுத்து இருக்கீங்க என்று புகழ்ந்து கூறியுள்ளார்.
மாலிக் மார்க்கெட்:
இருக்கிறதிலேயே மிகப்பெரிய அளவான மார்க்கெட் நம்ம மலேசியா மார்க்கெட் தான் . ஓவர்சீஸ் பிசினஸ்ல ரொம்ப பெரிய அளவில் நடக்கும் பிசினஸ் நம்ம மலேசியா மார்க்கெட் தான் மிகப்பெரியது என்று மாலிக்கை சொல்லாமல் சொல்லிருக்கிறார் விஜய். மலேசியா கவர்மெண்டுக்கும் நன்றி என்று கூறியுள்ளார் விஜய்.
என்னுடைய கடைசி படம் ஜனநாயகன். என்று வருத்தமாக கூறிய விஜய் இது சொல்லலாமா வேண்டாமா என்று மிகவும் வருத்தப்பட்டார் அது ரசிகர்களுக்கு இடையே பெரும் கவலையாக இருந்தது சரி அது ஒரு புறமும் இருக்கட்டும் என்று தன்னை ஆறுதல் படுத்துக் கொண்டார் விஜய் அது பார்ப்பதற்கு மிகவும் கவலையாக இருந்தது.
சினிமாவை விட்டு ஏன் போறீங்க என்று எல்லாரும் என்னை கேக்குறாங்க சினிமா ஒரு மிகப்பெரிய கடல் அதில் நான் ஒரு சின்னதா மணல் வீடு கட்டலாம் இருந்தா எனக்கு ஆனா உங்களால எனக்கு ஒரு மாளிகை கட்ட முடிஞ்சுச்சு அதுக்கெல்லாம் காரணம் நீங்க தான் இன்று ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்தார் விஜய்.
விஜயின் அனைத்து படங்களிலும் ஆடுகளாகத்திற்கு விஜய் ஒரு குட்டி ஸ்டோரி சொல்வதை வழக்கமாக இருந்து வருகிறது ஒவ்வொரு குட்டி ஸ்டோரையும் ஒவ்வொரு அர்த்தத்தை கொண்டு இருக்கும் இது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்று வந்தது இந்த படத்தில் என்ன குட்டி ஸ்டோரி சொல்ல போகிறார் என்று மக்களுக்கு இடையே மிகுந்த வரவேற்பு பட்டிருந்த நிலையில் தற்போது ஜனநாயகன் ஆடியோ லான்ச்சிலும் விஜய் குத்து ஸ்டோரி கூறியுள்ளார்.
இந்தக் குட்டி ஸ்டோரி என்னவென்றால் ஒரு கர்ப்பிணி பெண் ஒரு ஆட்டோவில் ஏறுகிறார் மழை மிக அதிகமாக பெய்து வந்தது அப்பொழுது அந்த ஆட்டோக்கார அந்த கர்ப்பிணி பெண்ணுக்கு ஒரு குடை ஒன்று கொடுக்கிறார். அப்பொழுது அந்த கர்ப்பிணி பெண் நான் எப்படி உங்களை தேடி வந்து இந்த குடையை மீண்டும் உங்களிடம் கொடுக்க என்று கேட்க நீ வேற யாராவது தேவைப்பட்டால் அவர்களுக்கு இந்த குடையை கொடுத்துவிடு என்று அந்த ஆட்டோக்காரர் கூறிவிட்டு செல்கிறார்.
அந்த கர்ப்பிணிப் பெண்ணும் மருத்துவமனை சென்று விட்டு இந்த குடையை அங்கு ஒருத்தர் மழைக்கு பயந்து ஓரமாக நிற்பதை கண்டு அந்த குடையை அந்த வயது முதியோர் இடம் கொடுத்து செல்கிறார் கர்ப்பிணிப் பெண் இதை நான் எப்படி உங்களிடம் கொடுப்பது என்று அந்த பெரியவர் கேட்க வேற யாராவது தேவைப்பட்டால் இந்த கூடையை கொடுத்து விடுங்கள் என்று அந்த கர்ப்பிணி பெண் கூறி விட்டு செல்கிறார். அந்தப் பெரியவர் பஸ் ஸ்டாப்புக்கு சென்ற பிறகு பஸ் வந்துவிட்டது. ஏறுவதற்கு முன் அங்கிருந்த ஒரு பூக்காரர் மழைக்கு பயந்து ஓரமாக இருப்பது பெரியவர் இந்த அம்மா இந்த குடையை வைத்துக்கொள் என்று பூக்காரரிடம் கொடுக்க இது நான் உங்களை எப்படி தேடி கொடுப்பது என்று அவர் கேட்க பெரியவர் நீ யாராவது தேவைப்பட்டால் அவர்களிடம் கொடுத்துவிட்டு என்று சொல்லி பஸ் ஏறிப் போய் விடுகிறார்.
இதற்குப் பிறகு அந்த பூக்கார அம்மா வீட்டிற்கு வரும்போது ஒரு ஸ்கூல் பெண் மழையில் நனைந்து வருவதை கண்டதும் அந்த பூக்கார அம்மா அந்த ஸ்கூல்குழந்தையிடம் கொடுத்துவிட்டு நீ வீட்டிற்கு பத்திரமாக போ என்று அனுப்பி விடுகிறார். அதற்குப் பிறகு அந்தக் அந்த ஸ்கூல் குழந்தையின் அப்பா ஐயோ மழை வேற பெய்து என் பொண்ணு எப்படி வீட்டுக்கு வரப்போகிறது வாசல்ல நின்னு வாசல்ல நின்னு பார்த்துக் கொண்டிருக்கிறார் அப்பொழுது அந்த குழந்தை குடையுடன் வீட்டுக்கு வருவதை கண்டு அதிர்ச்சி அடைகிறார் அந்த குழந்தையின் அப்பா அது யார் என்றால் அந்த முதல் குடையை கொடுத்து அந்த ஆட்டோக்காரர் தான். அந்தக் குடை அவர் கொடுத்த குடை.
முடிஞ்ச வரைக்கும் ஒரு சின்ன சின்ன ஹெல்ப் மற்றவர்களுக்கு செய்வதன் மூலம் நம்மளுக்கு அந்த பலன் உதவும் என்று இந்த கதை மூலம் தெரிய வருகிறது. வெள்ளத்துல தவிக்கிற ஒருவனுக்கு இங்க படகு கொடுத்தீங்கன்னா பாலைவனத்துல தவிக்கும் போது ஒட்டகமா வந்து நிக்கும்.
ஃப்ரீ அட்வைஸ்:
யாராவது நமக்கு கெடுதல் செய்தால் அவர்களுக்கு நம்ம பழி வாங்கிட்டாலும் அந்த நாள் முழுக்க நீங்க மகிழ்ச்சியாக இருப்பீர்கள் ஆனால் அவர்களை நீங்கள் மன்னித்து விட்டால் வாழ்நாள் முழுவதும் மகிழ்ச்சியாக இருப்பீர்கள் யாரையும் கஷ்டப்படுத்துவதற்கும் பழி வாங்குவதற்கும் அல்ல இந்த வாழ்க்கை என்று இது ஃப்ரீ அட்வைஸாக கூறியுள்ளார் விஜய் . பானியில் புடிச்சிருந்தா எடுத்துக்கோங்க இல்லேன்னா விட்ருங்க என்று கூறியுள்ளார்.
எம் அனிருத்துக்கு நான் ஒரு பெயர் வைக்கிறேன் MDS அப்படி என்றால் என்ன என்று விஜய் அனைவரிடமும் கேட்கிறார் அப்போது யாருக்கும் தெரியாமல் இருக்கும்போதே musical departmental Store என்று விஜய் கூறுகிறார். அனிருத் சிரித்துக் கொண்டே இருக்கிறார். அந்த ஸ்டோரி தொடர்ந்து உள்ள போனீங்கன்னா உங்களுக்கு என்ன வேணுமோ அதை நீங்க எடுத்துக்கலாம் மியூசிக் பிஜிஎம் பிஜிஎம் என்று எது வேணாலும் எடுத்துக்கலாம் என்று அவரின் இசைதிறமையை மிகவும் அழகாக எடுத்துக் கூறுகிறார் விஜய்.
இயக்குனர் எஸ் வினோத் ஒரு சமூகப் பொறுப்புள்ள ஒரு இளைஞர். சில படங்கள் இவருடன் இணைந்து நடிப்பதாக இருந்தது ஆனால் தற்போது ஜனநாயகத்தின் நாங்கள் இணைந்து நடித்துள்ளோம் என்று வினோத்தை பெருமையாக பேசியுள்ளார் தளபதி விஜய். ஐடியாலஜி நாலேஜ் மிகவும் அழகாக இருக்கும் என்று அவரை பெருமிதம் படுத்தி உள்ளார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.