அரசியல் கட்சி துவங்க நாள் குறித்த விஜய்! தேதி குறித்து வெளியான தகவல்? கொண்டாட்டத்தில் தளபதி ரசிகர்கள்!

Published : Jul 19, 2023, 11:44 PM ISTUpdated : Jul 19, 2023, 11:49 PM IST

தளபதி விஜய் ஏற்கனவே அரசியல் வருகை குறித்து அறிவிக்கும் விதத்தில், பல்வேறு விஷயங்களை செய்து வரும் நிலையில், விரைவில் அரசியல் துவங்க உள்ளதை அதிகார பூர்வமாக அறிவிக்க நாள் குறித்துவிட்டதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

PREV
15
அரசியல் கட்சி துவங்க நாள் குறித்த விஜய்! தேதி குறித்து வெளியான தகவல்? கொண்டாட்டத்தில் தளபதி ரசிகர்கள்!

தமிழ் சினிமாவில் வசூல் மன்னனாக இருப்பவர் தளபதி விஜய். இவர் நடிப்பில் உருவாகும் ஒவ்வொரு படங்களுக்கும் ரசிகர்கள் மத்தியில், ஏக்கப்பட்ட எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. அந்த வகையில், தற்போது விஜய் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், 'லியோ' படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தை தொடர்ந்து, இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் 'தளபதி 68' படத்தில் நடிக்க உள்ளது உறுதியாகி உள்ளது. இந்த படம் குறித்த அடுத்த அடுத்த தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்க படும் நிலையில், தற்போது விஜய் அரசியல் வருகை குறித்த பேச்சு அதிகம் அடிப்பட துவங்கியுள்ளது.
 

25

ஏற்கனவே விஜய் சில ஆடியோ லான்ச் நிகழ்ச்சிகளில் அரசியல் பற்றி பேசி, தன்னுடைய அரசியல் ஆர்வத்தை வெளிக்காட்டிய நிலையில்... விஜய் மக்கள் இயக்கம் மூலம் இதற்கான பிள்ளையார் சுழியை போட்டார்.  கடந்த 2022 ஆம் ஆண்டு, தமிழ்நாட்டில் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில், விஜய் மக்கள் இயக்கம் மூலம் போட்டியிட்ட பலர் வெற்றிபெற்றனர். வெற்றி பெற்றவர்களை நேரில் அழைத்து தன்னுடைய வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.

நடிப்புக்கு பிரேக்... ஈஷா மையத்தில் பூரண ஆரோக்கியத்திற்காக தியான நிலையில் சமந்தா! வைரல் போட்டோஸ்!
 

35

மேலும் விஜய் மக்கள் இயக்கம் இயக்கம் மூலம் பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வரும் விஜய், சமீபத்தில்,  தமிழகத்தில் உள்ள 234 தொகுதியிலும், 10 மற்றும் 12 ஆம் வகுப்பில் முதல் மூன்று மதிப்பெண்களை பெற்று தேர்ச்சியடைந்த மாணவ மாணவிகளுக்கு ஊக்கத் தொகை கொடுத்து பாராட்டினார்.

45

லியோ படப்பிடிப்பு முடிந்த மறுநாளே விஜய் மக்கள் இயக்க பொறுப்பாளர்களை சந்தித்து, தளபதி விஜய் அரசியல் குறித்து அவர்களுடன் அதிகம் பேசியதாக கூறப்பட்டது. குறிப்பாக அரசியலுக்கு வந்தால் திரையுலகில் இருந்து விலகி விடுவேன் என அவர் கூறியதாக, விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்தவர்கள் தெரிவித்தனர். மேலும் விஜய் அரசியலுக்கு  வருவதற்கான கட்டமைப்புகள் தயாராக உள்ளதாகவும், விஜய் கைகாட்டியதுமே அரசியலில் ஈடுபடுவோம் என கூறி இருந்தனர்.

மகளுடன் ஒரு நாள்... அம்மாவுடன் மறுநாள்..! அட்ஜஸ்ட்மென்ட் செய்ய சொல்லி புரட்டி எடுத்த முரட்டு நடிகர்!
 

55

தற்போது விஜய் அரசியல் கட்சியை விரைவில் துவங்க நாள் குறித்து விட்டதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி செப்டம்பர் மாதம் 17 ஆம் தேதி, அதாவது பெரியாரின் பிறந்தநாள் அன்று விஜய் தன்னுடைய அரசியல் கட்சியை துவங்க உள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் இதுகுறித்த அதிகார பூர்வ தகவல் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 
 

Read more Photos on
click me!

Recommended Stories