தமிழ்நாடே அலற போகுது; வரலாறு படைக்க வருகிறான் – அனல் தெறிக்கும் ‘ஜன நாயகன்’ 2-வது சிங்கிள் புரோமோ!

Published : Dec 17, 2025, 08:39 PM IST

Oru Pere Varalaaru song lyrics meaning in Tamil : விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ஜன நாயகன் படத்தின் 2வது சிங்கிள் டிராக் புரோமோ வீடியோ வெளியாகியுள்ளது.

PREV
13
Jana Nayagan 2nd single promo viral

2026 ஆம் ஆண்டில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்திய படம் ஜன நாயகன். விஜய்யின் கடைசி படமான இந்தப் படத்தை ஹெச் வினோத் இயக்கியுள்ளார். முழுக்க முழுக்க அரசியல் கதையை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டது. தெலுங்கு படமான பகவந்த கேசரி படத்தின் தமிழ் ரீமேக் என்றும் சொல்லப்படுகிறது. தமிழ் சினிமா வரலாற்றில் இந்தப்படம் தான் ரூ.1000 கோடிக்கு அதிகமாக வசூல் குவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

23
Jana Nayagan Movie, Jana Nayagan Second Single

ஜன நாயகன் படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். மேலும் மமிதா பைஜு, மோனிசா பிளெஸ்ஸி, பிரியாமணி, பிரகாஸ்ராஜ், கெளதம் மேனன் என்று ஏராளமான பிரபலங்கள் நடித்துள்ளனர். கேவி என் புரோடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். வரும் 27ம் தேதி மலேசியாவில் இசை வெளியீட்டு விழா நடக்கும் நிலையில் 2வது சிங்கிள் டிராக் குறித்த அப்பேட் வெளியாகியுள்ளது.

33
Powerful political song Jana Nayagan

அதன்படி நாளை மாலை 6.30 மணிக்கு ஜன நாயகன் படத்தின் 2வது சிங்கிள் டிராக் பாடலான ஒரு பேரே வரலாறு அழிச்சாலும் அழியாதே: அவன் தான் ஜன நாயகன், நம் மக்கள் நினைக்காமல் மாற்றம் பிறக்காது தல வந்தால் தரமானவன் என்று அந்த புரோமோ வீடியோவில் இடம் பெற்றுள்ளது. புரோமோவே இப்படி இருக்கிறது என்றால் பாடல் வெளியானால் தமிழ்நாடே அலறும் போலயே. ஏற்கனவே ஈரோட்டில் தவெவின் பிரச்சாரம் வேறு நாளை நடைபெறும் நிலையில் இப்போது ஒரு ஊரே வரலாறு என்ற பாடலின் புரோமோ வெளியாகி வைரலாகி வருகிறது. முழுக்க முழுக்க விஜய் தனது பாடலின் மூலமாக தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளார். படமும் இதே போன்று தான் தேர்தல் பிரச்சார படமாக இருக்கும் என்று தெரிகிறது.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Photos on
click me!

Recommended Stories