பராசக்தி என்ன பராசக்தி இதோ வருது பாரு ஜன நாயகன்: டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Published : Jan 01, 2026, 07:57 PM IST

Jana Nayagan Movie Trailer Release Date : 2026-ன் மிகப்பெரிய எதிர்பார்ப்பான 'ஜனநாயகன்' திரைப்படத்தின் டிரைலர் வெளியாகும் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

PREV
14
Jana Nayagan Movie Trailer Release Date

தளபதி விஜய்யின் கடைசி படமாக உருவாகியிருக்கும் படம் தான் ஜன நாயகன். இன்னும் 9 நாட்களில் உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது. ஏற்கனவே மலேசியாவில் பிரம்மாண்டமாக இசை வெளியீட்டு விழாவை படக்குழுவினர் நடத்தி முடித்துள்ளனர். இயக்குநர் ஹெச் வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள ஜன நாயகன் முழுக்க முழுக்க விஜய்க்கான படமாகவே உருவாக்கப்பட்டுள்ளது. மேலும், இந்தப் படத்தில் விஜய்யின் அரசியல் வருகைக்கான எல்லா அம்சங்களும் நிறைந்திருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

24
Parasakthi Movie Trailer Date

அனிருத் இசையமைத்துள்ள இந்தப் படத்தின் தளபதி கச்சேரி, ஒரு பேரே வரலாறு மற்றும் செல்ல மகள் ஆகிய பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றன. இதில் செல்ல மகள் பாடலை விஜய் தனது சொந்த குரலில் பாடியிருக்கிறார். தெலுங்கு சினிமாவில் வெளியான பகவந்த் கேசரி படத்தின் தமிழ் ரீமேக்காக இந்தப் படம் உருவாகியுள்ளது. வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 9 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. ஜன நாயகன் படத்தில் விஜய்யுடன் இணைந்து பூஜா ஹெக்டே, பாபி தியோல், மமிதா பைஜூ, நாசர், பிரகாஷ் ராஜ், பிரியாமணி ஆகியோர் உள்பட ஏராளமான பிரபலங்கள் நடித்துள்ளனர்.

34
Jananayagan vs Sivakarthikeyan Parasakthi

முழுக்க முழுக்க அரசியல் கதையை மையப்படுத்திய இந்த படம் 2026ஆம் ஆண்டில் சிறந்த படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கேவிஎன் புரோடக்‌ஷன்ஸ் நிறுவனம் இந்தப் படத்தை தயாரித்துள்ளது. விஜய்யின் கடைசி படம் என்பதால் ரூ.1000 கோடி வசூல் குவித்த படம் என்ற சாதனையை படைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் தான் ஜன நாயகன் படத்தின் டிரைலர் எப்போது வெளியாகும் என்பது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி வரும் 3ஆம் தேதி மாலை 6.45 மணிக்கு டிரைலர் ரிலீசாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

44
Latest Tamil Movie Trailer Announcements 2026

பராசக்தி படத்தின் இசை வெளியீட்டு விழாவும் 3ஆம் தேதி வெளியாக இருப்பதாக கூறப்படும் நிலையில் இப்போது ஜன நாயகன் படத்தின் டிரைலர் ரிலீஸ் தேதி வெளியாகியுள்ளது. வரும் 9ஆம் தேதி ஜன நாயகன் திரைக்கு வரும் நிலையில் 10ஆம் தேதி பராசக்தி படம் திரைக்கு வருகிறது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Photos on
click me!

Recommended Stories