Sivakarthikeyan Wife Aarthi New Year Post : நடிகர் சிவகார்த்திகேயன் தனது மனைவி ஆர்த்தியுடன் வடபழனி முருகன் கோயிலில் 2026 புத்தாண்டை வரவேற்றார். மழையின் ஆசிர்வாதத்துடன் ஒரு சிறப்பான ஆரம்பம்" என்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் தான் பராசக்தி. வரும் 10ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது. அமரன் படத்திற்கு பிறகு சிவகார்த்திகேயன் அடுத்தடுத்த படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். மதராஸி தோல்வி கொடுத்த நிலையில் அடுத்ததாக வெளியாக இருக்கும் படம் தான் பராசக்தி. முழுக்க முழுக்க ஹிந்தி எதிர்ப்பு கதையை மையப்படுத்தி இந்தப் படம் உருவாக்கப்பட்டுள்ளது. இயக்குநர் சுதா கொங்கரா இந்தப் படத்தை இயக்கியுள்ளார். இது சிவகார்த்திகேயனின் 25ஆவது படம். இந்தப் படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
23
SK Aarthi Temple Visit 2026, Sivakarthikeyan Year of Parasakthi
பராசக்தி படத்தில் சிவகார்த்திகேயன் உடன் இணைந்து ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா, பிரித்விராஜன், பாப்ரி கோஷ், குரு சோமசுந்தரம் என்று ஏராளமான பிரபலங்கள் நடித்துள்ளனர். வரும் ஜனவரி 3ஆம் தேதி பராசக்தி படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற இருப்பதாக கூறப்படுகிறது. ஏற்கனவே வரும் 14ஆம் தேதி படம் வெளியாக இருப்பதாக கூறப்பட்ட நிலையில் பின்னர் படத்திற்கு கிடைத்த வரவேற்பு மற்றும் வசூல் ஆகியவற்றை கருத்தில் கொண்டு படத்தை ஜனவரி 10ஆம் தேதி வெளியிட இருப்பதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். அதற்கு முன்னதாக ஜனவரி 9ஆம் தேதி ஜன நாயகன் திரைக்கு வரும் நிலையில் இந்தப் படத்திற்கு போட்டியாக ஜன நாயகன் வெளியாக இருக்கிறது.
33
Sivakarthikeyan New Year Instagram Post 2026
கடந்த சில தினங்களுக்கு முன்பு பராசக்தி படத்தின் மேக்கிங் வீடியோ வெளியானது. இந்த நிலையில் தான் ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு சிவகார்த்திகேயன் மனைவி ஆர்த்தியுடன் சென்னை வடபழநி ஆண்டவர் கோயிலில் சாமி தரிசனம் செய்துள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் தனது இன்ஸ்டா பக்கத்தில் புகைப்படங்களை பகிர்ந்த ஆர்த்தி கோவில் மணிகள், சூரிய உதயம், மழையால் ஆசீர்வதிக்கப்பட்ட ஆரம்பம், ஒரு சிறந்த புத்தாண்டை வரவேற்க என்று பதிவிட்டுள்ளார். சிவகார்த்திகேயன் மற்றும் ஆரத்தி இருவருக்கும் கடந்த 2010 ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. இதையடுத்து இந்த தம்பதிகளுக்கு ஆராதனா என்ற மகளும், குகன் மற்றும் பவன் என்று 2 மகன்களும் இருக்கின்றனர்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.