
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் இன்றைய 678ஆவது எபிசோடில் என்ன நடக்கிறது என்பது பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம். வீட்டிற்கு வந்து விசாரணை நடத்திய எஸ்ஐயிடம் அம்மாவின் பேச்சைக் கேட்டு எல்லாவற்றிற்கும் ஆமா சாமி போட்டு கடையில் கையெழுத்து போட்டுக் கொடுத்தார். ஆனால், நான் செய்தது சரியா தப்பா என்று கூட தெரியாது. என்னுடைய வாழக்கை எனக்கு திரும்ப வேண்டும் என்று கூறி தனக்கு தானே அழுது புலம்புகிறார். இதைத் தொடர்ந்து தங்கமயிலுக்கு மீனா போன் போடவே, அதனை பாக்கியம் எடுத்து பேசினார். உன் மீது நான் புகார் கொடுக்கவில்லை. நீ எதுக்கு ஸ்டேஷனுக்கு போன, மயிலிடம் பேச முடியாது. நீ எதுக்கு அவளிடம் பேச வேண்டும்.
அதான் அடித்து துரத்துவிட்டாச்சு. அப்புறம் என்ன? அவர்கள் மீது புகார் கொடுக்கத்தான் செய்வார்கள். இதில் விவாகரத்து நோட்டீஸ் வேறு, இவளை துரத்திவிட்டு இன்னொரு கல்யாணம் செய்யலாம் என்றூ முடிவு செய்துவிட்டீங்களா? அப்படியெல்லாம் விட்டு விட முடியாது. நான் அவ்வளவு சீக்கிரம் நடக்க விட்டுருவேனா? விவாகரத்து நோட்டீஸில் கையெழுத்து போடனுமா? நாங்கள் யாரிடமும் பேசும் நிலையில் இல்லை. அவர்களும் இப்போதைக்கு எங்களுடன் பேச மாட்டார்கள். உங்களது பக்கம் யாருமே அமைதியாக இல்லை. விவாகரத்து நோட்டீஸ் அனுப்பியிருக்கிறீர்கள். ஸ்டேஷனில் உட்கார வைத்தால் தான் நலல்து நடக்கும். நான் நடக்க வைப்பேன். என்ன எங்களுக்கு கேட்க ஆள் இல்லையா? எங்களை மாதிரி ஆட்களுக்கு தான் கேட்பதற்கு சட்டம் எல்லாம் இருக்கிறது. அவர்கள் எங்களுக்கு நியாயம் சொல்வார்கள்.
கொடுத்த கேஸை எல்லாம் வாபஸ் வாங்க முடியாது. என்னுடைய மகளை நீங்கள் எல்லாம் நடத்தியதை நினைத்தால் எனக்கு ரத்த கண்ணீர் வருது. அப்போ நீ ஒன்னு பண்ணு, உன்னுடைய சரவணன் மாமாக்கிட்ட போய் மயில் அக்காவை கையோடு கூட்டிச் சென்று அவரை நல்லபடியாக வாழ வைக்கிறேன் என்று சொல்ல சொன்னால் நான் வாபஸ் வாங்குவேன். இல்லையென்றால் வாங்க முடியாது. உன்னிடம் பேச விருப்பமில்லை என்று கூறியுள்ளார்.
நீ வந்து மயிலை பார்த்து நாலு வார்த்த ஆறுதலாக பேசினேன் தான் நான் உன்னுடைய பெயரை சேர்க்கவில்லை. ஓவராக பேசினேனா உன்னுடைய பெயரையும் சேர்த்து கொடுத்துவிடுவேன் என்று மிரட்டினார். இதைத் தொடர்ந்து ஒவ்வொருவராக அழைத்து இன்ஸ்பெக்டர் விசாரணை மேற்கொண்டார். இதில், முதலாவதாக பாண்டியன் சென்றார். என்னதான் பிரச்சனையாக இருந்தாலும், இப்படியா அந்த பெண்ணை வீட்டை விட்டு துரத்தியடிப்பீங்க என்று கேட்க, பாண்டியன் அ முதல் அக்கனா வரை என்ன நடந்தது என்று எல்லாவற்றையும் வெளிப்படையாக பேசியுள்ளார். நான் தான் சரவணனுக்கு பெண் பார்த்து கல்யாணம் பண்ணி வைத்தேன். அவர்களைப் பற்றி விசாரிக்கவில்லை.
படிச்சிருக்கு என்று தான் நான் வேலைக்கு சேர்த்துவிட்டேன். அவர்கள் சொன்னது போன்று நாங்கள் வரதட்சணையே கேட்கவில்லை. ஒரு பொம்பள பிள்ளையை கல்யாணம் பண்ணிட்டு வந்து கொடுமைப்படுத்தி கஷ்டப்படுத்தும் அளவிற்கு மோசமான குடும்பம் இல்லை என்றார். இவரை தொடர்ந்து கோமதி வந்து பேசினார். என்னுடைய மகள் அரசி மாதிரி தான் என்னுடைய 3 மருமகள்களையும் நான் நடத்தினேன். படிப்பு, வயசு பிரச்சனையை கூட விட்டுவிடலாம், குழந்தை விஷயத்தில் எப்படி பொய் சொல்லலாம். நான் சாப்பிடும் சாப்பாடு மீது, என்னுடைய மகன்கள் மீதும் என்று எல்லாவற்றின் மீதும் சத்தியமாக நாங்கள் கொடுமைப்படுத்தவில்லை என்றார்.
இவரைத் தொடர்ந்து சரவணன் வந்து வாக்குமூலம் கொடுத்தார். தங்கமயில் வீட்டார் கொடுத்த எல்லா புகாரும் பொய். எனக்கு இன்னொரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதாக என்னுடைய அப்பா, அம்மாக்கிட்ட பொய் சொன்னா. மேடம் நான் தான் கல்யாணம் பண்ணேன். நான் தான் விவாகரத்து நோட்டீஸ் அனுப்பினேன். நீங்களே சொன்னாலும் இனிமேல் அவளுடன் வாழ முடியாது என்றார். மேலும், என்னுடைய முடிவில் நான் உறுதியாக இருக்கிறேன் என்றார்.
அவரைத் தொடர்ந்து செந்தில், கதிர், அரசி மற்றும் ராஜி என்று எல்லோரையும் விசாரித்த இன்ஸ்பெக்டர் அடுத்து பாக்கியத்தையும் வர வைத்து விசாரணை மேற்கொண்டார். அப்போது அவர், மேடம் நாங்கள் பொய் சொல்லவில்லை. உண்மையை சொல்லிவிட்டோம், என்றார். பதிலுக்கு 12 ஆம் வகுப்பு படித்தவருக்கு தான் ஸ்கூலில் டீச்சர் வேலை வாங்கி தருவாங்களா? என்று கேட்டார். இதற்கு பதில் பேச முடியாமல் மேடம் நீங்களும் அவர்கள் பக்கம் சாய்ந்துவிடாதீங்க, நியாயம் வாங்கி கொடுங்க மேடம் என்றார்.
கடைசியாக முத்துவேல் மற்றும் சக்திவேல் இருவரையும் அழைத்து விசாரணை மேற்கொள்ள, அதில் பாண்டியன் நல்லவன் என்னுடைய மகளும் சரி தங்கச்சியும் சரி அங்க தான் வாழ்கிறார்கள். தங்கமயிலின் குடும்பம் ஒரு ஃபிராடு குடும்பம். அக்கம் பக்கத்தினரிடம் கடன், பொய், பித்தலாட்டம் என்று ஒரு ஃபிராடு குடும்பம். பாண்டியனை ஏமாற்றி சரவணன் தலையில் கட்டி வைத்துவிட்டாங்க. அவங்க சொன்ன எதுவும் உண்மையில்லை. எல்லாமே பொய் புகார். அவர்களை மாதிரி மோசமான குடும்பம் இருக்கவே முடியாது என்று கூறினார். அதைக் கேட்டு இன்ஸ்பெக்டருக்கு ஒரே ஷாக். அதோடு பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலின் இன்றைய எபிசோடு முடிந்தது.