அரங்கம் அதிர... விசிலு பறக்க... தவெக 3ம் ஆண்டு தொடக்க விழாவில் டான்ஸ் ஆடிய விஜய் - வைரலாகும் வீடியோ

Published : Feb 02, 2026, 12:13 PM IST

தமிழக வெற்றிக் கழகத்தின் மூன்றாம் ஆண்டு தொடக்க விழா, பனையூரில் இன்று நடைபெற்றது. அதில் அக்கட்சியின் தலைவர் விஜய் டான்ஸ் ஆடிய வீடியோ காட்சிகள் வைரலாகி வருகிறது.

PREV
15
TVK Vijay Dance

2023 ஆம் ஆண்டு தொடக்கத்திலிருந்தே நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்க உள்ளதாக செய்திகள் வெளியாகி வந்தன. அதனை உறுதிப்படுத்தும் வகையில், 2024 பிப்ரவரி 2 ஆம் தேதி ‘தமிழக வெற்றிக் கழகம்’ என்ற பெயரில் புதிய அரசியல் கட்சியை தொடங்குவதாக அவர் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இதனைத் தொடர்ந்து, கட்சியின் கொடி, கொள்கைகள் உள்ளிட்ட முக்கிய அறிவிப்புகள் அடுத்தடுத்த மாதங்களில் வெளியிடப்பட்டன.

25
தமிழக வெற்றிக் கழகம்

தவெகவின் முதல் மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் மிகப் பெரிய அளவில் நடைபெற்றது. இதன் பின்னர், சுமார் ஒரு வருட இடைவெளிக்குப் பிறகு, இரண்டாவது மாநாடு மதுரை பாரபத்தியில் பிரம்மாண்டமாக நடத்தப்பட்டது. இரு மாநாடுகளிலும் லட்சக்கணக்கான தொண்டர்கள் கலந்துகொண்டு விஜய்க்கு தங்களின் உற்சாக ஆதரவை வெளிப்படுத்தினர். முதல் மாநாட்டிலேயே சட்டமன்றத் தேர்தலை குறிக்கோளாகக் கொண்டு கட்சி செயல்படும் என விஜய் தெரிவித்திருந்த நிலையில், கடந்த சில மாதங்களாக தவெக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

35
3ம் ஆண்டு அடியெடுத்து வைக்கும் தவெக

கரூர் சம்பவம் போன்ற பல நெருக்கடிகளுக்கு மத்தியிலும், தேர்தலை சந்திக்க தயாராகி வரும் தவெக, இன்று தனது மூன்றாம் ஆண்டில் காலடி எடுத்து வைத்துள்ளது. இதனை முன்னிட்டு, “இரண்டு ஆண்டுகளை இயல்பாகவும், இயல்பை மீறியும் கடந்து, நமது அரசியல் பெரும்பயணம் தொடர்ந்து விரிவடைகிறது” என விஜய் குறிப்பிட்டுள்ளார்.

45
விஜய் ட்வீட்

மேலும், 2026 சட்டமன்றத் தேர்தல் இதுவரை இல்லாத புதிய அரசியல் சூழலை உருவாக்கியுள்ளது என்றும், அதற்குக் காரணம் தங்களின் அரசியல் வருகையே என அனைவரும் பேசுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த சூழலை சாதகமாக மாற்றி, தெளிவான திட்டமிடலுடனும் திறமையான அணுகுமுறையுடனும் தேர்தல் அரசியலில் வெற்றி பெற்று, அதிகார அரசியலுக்கான அங்கீகாரம் நோக்கி பயணிப்போம் என்றும் அவர் பதிவிட்டுள்ளார்.

55
டான்ஸ் ஆடிய விஜய்

இதற்கிடையே, தவெக தொடங்கியதன் மூன்றாம் ஆண்டு விழா இன்று சென்னை பனையூரில் அமைந்துள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வில், கட்சித் தலைவர் விஜய் கலந்து கொண்டு தவெக கொடியை ஏற்றிவைத்து, கட்சியின் கொள்கைத் தலைவர்களுக்கு மரியாதை செலுத்தினார். இதன் பின்னர் நடைபெற்ற விழாவில், பாடகர் வேல்முருகன் ஒரு ஸ்பெஷல் பாடல் ஒன்றை பாடினார். அந்தப் பாடலை கேட்டு வைப் ஆன விஜய், சட்டென மேடையில் ஆட்டம் போடத் தொடங்கினார். அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் செம வைரலாகி வருகிறது. அதைப்பார்த்த தவெக நிர்வாகிகள் விசிலடித்து அவரை உற்சாகப்படுத்தினர்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Photos on
click me!

Recommended Stories