Prakash raj : முதல்வருடன் திடீர் மீட்டிங்... விரைவில் எம்.பி. ஆகிறார் நடிகர் பிரகாஷ் ராஜ்?

First Published | May 14, 2022, 2:26 PM IST

Prakash raj : நடிகர், தயாரிப்பாளர், இயக்குனர் என் பன்முகத்திறமை கொண்ட நடிகர் பிரகாஷ் ராஜுக்கு எம்.பி பதவி வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

கன்னட நடிகரான பிரகாஷ் ராஜ், கடந்த 1994-ம் ஆண்டு கே.பாலசந்தர் இயக்கத்தில் வெளியான டூயட் படம் மூலம் தமிழ் திரையுலகில் நடிகராக அறிமுகமானார். இதையடுத்து ஹீரோ, வில்லன், குணச்சித்திர வேடம் என பல்வேறு முன்னணி நடிகர்களுடன் நடித்து பாப்புலர் ஆன பிரகாஷ் ராஜ், சில படங்களை இயக்கியும், தயாரித்தும் உள்ளார்.

திரையுலகில் 30 ஆண்டுகளுக்கு மேல் இருக்கும் பிரகாஷ் ராஜ் இன்றளவும் பிசியான நடிகராக வலம் வருகிறார். சமீபத்தில் யாஷ் நடிப்பில் வெளியான கே.ஜி.எஃப் 2 படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அசத்திய பிரகாஷ் ராஜ், தற்போது தளபதி 66 படத்தில் விஜய்யுடன் நடித்து வருகிறார். இதுதவிர தனுஷுடன் இவர் நடித்துள்ள திருச்சிற்றம்பலம் திரைப்படம் வருகிற ஜூலை 1-ந் தேதி திரை காண உள்ளது.

Tap to resize

சினிமாவில் பிசியாக இருந்தாலும் அவ்வப்போது அரசியல் பேசி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார் பிரகாஷ் ராஜ். குறிப்பாக சமீபகாலமாக பிரதமர் மோடியையும் மத்திய அரசையும் அதிகளவில் விமர்சித்து வருகிறார். இதனால் சில சமயங்களில் சர்ச்சைகளிலும் சிக்கி உள்ளார்.

இந்நிலையில் நடிகர் பிரகாஷ் ராஜுக்கு எம்.பி பதவி வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தெலுங்கானா ராஷ்ட்ரிய சிமிதி கட்சியில் உள்ள இரண்டு ராஜ்யசபா எம்.பி பதவிகள் காலியாக உள்ளன. அதற்கான தேர்தல் வருகிற ஜூன் 10-ந் தேதி நடைபெற உள்ளது. இந்த இரண்டு இடங்களில் பிரகாஷ் ராஜுக்கு ஒரு எம்.பி. சீட் வழங்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

இதையும் படியுங்கள்... அவுங்க 2 பேரை விட தெருநாய் கூட இருந்தா நான் பாதுகாப்பா இருப்பேன்- வைரமுத்துவை மறைமுகமாக அட்டாக் பண்ணிய சின்மயி

Latest Videos

click me!