லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான மாஸ்டர் படத்தின் சூப்பர் டூப்பர் வெற்றியைத் தொடர்ந்து, தளபதி விஜய்யின் 65வது படத்தை நெல்சன் இயக்கி வருகிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்க ‘தளபதி 65’ என தற்காலிகமாக அழைக்கப்பட்டு வருகிறது.
விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே மற்றும் அபர்ணா தாஸ், விடிவி கணேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். அனிருத் இசையமைக்கும் இப்படத்திற்கு, மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார். காதல், நகைச்சுவை, அதிரடி சண்டை காட்சிகளுடன் இந்த படம் அதகளமாக தயாராகி வருகிறது.
இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் முடிந்துள்ளது. கொரோனா 2-வது அலை குறைந்த பின் சென்னையில் அடுத்தகட்ட படப்பிடிப்பை தொடங்க திட்டமிட்டு உள்ளனர். இந்த படத்துக்கு இன்னும் பெயர் வைக்கவில்லை.
இந்நிலையில் நாளை தளபதி விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு முதல் நாளான இன்று மாலை 6 மணிக்கு தளபதி 65 படத்தின் அதிகாரப்பூர்வ பெயர் வெளியாகும் என சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்திருந்தது.
இந்நிலையில், தளபதியின் 65-வது படத்துக்கு ‘டார்கெட் அல்லது புல்லட்’ என்ற தலைப்பு வைக்கப்பட்டு உள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வந்தது. ஆனால் யாருமே எதிர்பார்க்காத வகையில் அசத்தலான தலைப்பை படக்குழு அறிவித்துள்ளது.
விஜய் 65 படத்திற்கு பீஸ்ட் என பெயரிடப்பட்டுள்ளது. கையில் துப்பாக்கியுடன் செம்ம மாஸாக விஜய் நின்றிருக்கும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியாகியுள்ளது.