சன் பிக்சர்ஸ் படத்தில் நடிக்க சம்பளத்தைக் குறைத்துக் கொண்ட விஜய்... அதுவும் இத்தனை கோடியா?

First Published | Aug 19, 2020, 8:53 PM IST

தளபதி 65 படத்தில் நடிப்பதற்காக விஜய் மற்றும் முருகதாஸ் தங்களது சம்பளத்தில் இருந்து எவ்வளவு கோடியை விட்டுக்கொடுத்துள்ளார்கள் தெரியுமா? 

தளபதி விஜய் தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 'மாஸ்டர்' படத்தில் நடித்துள்ளார். கடந்த ஏப்ரல் மாதமே வெளியாக இருந்த இந்த படம், தற்போது கொரோனா பிரச்சனை காரணமாக போடப்பட்டுள்ள ஊரடங்கால் ரிலீஸ் ஆகாமல் உள்ளது. இந்த படம் 2021 பொங்கல் விருந்தாக திரைக்கு வரும் என தயாரிப்பாளர் தெரிவித்துள்ளார்.
இந்த படம் வெளியாவதில் தாமதம் ஆகி வருவதால், இப்போது விஜய் அடுத்ததாக நடிக்க உள்ள தளபதி 65 படம் குறித்த தகவல் வைரலாகி வருகிறது.
Tap to resize

சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ள இந்த படத்தை, இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகின. இப்படம் துப்பாக்கி படத்தின் இரண்டாம் பாகமாக இருக்கவும் வாய்ப்புள்ளதாக கூறப்பட்டது.
தற்போது தீவிரமடையும் கொரோனா பிரச்சனைகள் காரணமாக சம்பளத்தில் ஒரு தொகையை குறைத்து கொள்ள வேண்டுமென ஏ.ஆர்.முருகதாஸ் மற்றும் விஜய்யிடம் சன் பிக்சர்ஸ் நிறுவனம் கோரிக்கை வைத்தது.இதையடுத்து முதலில் மறுத்தாலும் பின்னர் ஏ.ஆர்.முருகதாஸ் சம்பளத்தை குறைத்துக்கொள்ள சம்மதித்ததாக கூறப்பட்டது.
ஆனால் விஜய் மட்டும் விடாப்பிடியாக இருந்த நிலையில், அவருடன் 100 கோடியில் இருந்து, 80 கோடியாக தன்னுடைய சம்பளத்தை குறைத்து கொண்டதாக தகவல் வெளியானது.
ஆனால் தற்போது அதை விட குறைவாக ரூ.70 கோடி சம்பளத்திற்கு விஜய் நடிக்க ஒப்புக்கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தனது முந்தைய படமான மாஸ்டர் படத்திற்காக விஜய் வாங்கி 80 கோடி ரூபாயை விட 10 கோடி குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.
முருகதாஸுக்கு 10 கோடி ரூபாய் சம்பளமாக பேசப்பட்டுள்ளதாகவும், படத்தின் மொத்த பட்ஜெட் 130 கோடி ரூபாய் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Latest Videos

click me!