'தலைவி' படத்தின் சென்சார் தகவலை வெளியிட்ட படக்குழு..!

First Published | Jun 22, 2021, 4:16 PM IST

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள, 'தலைவி' திரைப்படத்தின் சென்சார் குறித்த தகவலை தற்போது படக்குழு அறிவித்துள்ளது.
 

மறைந்த பழம்பெரும் நடிகையும், தமிழக அரசியல் களத்தில் சிங்க பெண்ணாக ஆட்சி செய்த, முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக எடுக்க, பல இயக்குனர்கள் போட்டி போட்ட நிலையில், இயக்குனர் கெளதம் மேனன் வெப் சீரிஸாக இயக்கி வெளியிட்டிருந்தார்.
ரம்யா கிருஷ்ணன் நடித்திருந்த இந்த வெப் தொடருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில், தற்போது இயக்குனர் ஏ.எல்.விஜய் 'தலைவி' என்கிற பெயரில் கங்கனாவை நாயகியாக நடிக்க வைத்து இயக்கியுள்ளார்.
Tap to resize

இந்த படத்தின் ட்ரெய்லர் ஏற்கனவே கங்கானாவின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியாகி, இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.
'தலைவி' படத்தை ஏப்ரல் மாதமே வெளியிட உள்ளதாக படக்குழு அறிவித்த நிலையில், கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வந்ததால் அந்த சமயத்தில் 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே மத்திய மாநில அரசுகள் அனுமதி கொடுத்தது.
மிகப்பெரிய பட்ஜெட்டில் உருகாகியுள்ள இந்த படத்தை, கொரோனா இரண்டாவது அலைக்கு இடையே, 50 சதவீத பார்வையாளர்களோடு வெளியிட்டால், போட்ட பணத்தை கூட எடுக்க முடியாது என்பதால் படக்குழு படத்தின் ரிலீஸை தள்ளி வைப்பதாக அறிவித்தது.
இந்நிலையில் தற்போது மீண்டும் கொரோனா பாதிப்புகள் குறைத்து வருவதால் வரும் வாரங்களில் கூடுதல் தளர்வுகள் அறிக்கை வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. எனவே மீண்டும் பட பணிகளை கையில் எடுத்துள்ள 'தலைவி' படக்குழு... இப்போது சென்சார் குறித்த தகவலை வெளியிட்டுள்ளது.
தலைவி படத்திற்கு யு சான்றிதழ் கிடைத்துள்ளதாக சமூக வலைத்தளத்தில் படக்குழு வெளியிட்டுள்ளதை தொடர்ந்து, விரைவில் ரிலீஸ் குறித்த அறிவிப்புகளும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Latest Videos

click me!