நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் கடைசியாக வெளியான படம் அண்ணாத்த. செண்டிமெண்ட் கமர்ஷியலாக உருவான இந்த படத்தை சிறுத்தை சிவா இயக்கி இருந்தார்.
28
thalaivar 169
இப்படம் தங்கச்சி செண்டிமெண்ட்டை மையமாக வைத்து உருவாக்கப்பட்டிருந்தது. இதில் கீர்த்தி சுரேஷ் தங்கையாக நடிக்க நயன்தாரா நாயகியாக தோன்றியிருந்தார்.
38
thalaivar 169
கடந்தாண்டு தீபாவளிக்கு வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களை சந்தித்ததோடு மட்டுமின்றி தோல்விப் படமாகவும் அமைந்தது. இதையடுத்து சிறந்த கதைக்களத்தை அடுத்தாக தேர்ந்திடுப்பதில் ரஜினி உறுதியாக இருந்தார்.
கடந்தாண்டு தீபாவளிக்கு வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களை சந்தித்ததோடு மட்டுமின்றி தோல்விப் படமாகவும் அமைந்தது. இதையடுத்து சிறந்த கதைக்களத்தை அடுத்தாக தேர்ந்திடுப்பதில் ரஜினி உறுதியாக இருந்தார்.
58
thalaivar 169
கார்த்திக் சுப்புராஜ், தேசிங்கு பெரியசாமி, பாண்டிராஜ், பால்கி, கே.எஸ்.ரவிக்குமார் போன்ற முன்னணி இயக்குனர்களுடன் ரஜினி இணைவார் என சொல்லப்பட்டது. பின்னர் அண்ணாத்தே இயக்குனருடன் மீண்டும் ரஜினி இணைய வாய்பிருப்பதாகவும் செய்தி உலா வந்தன.
68
thalaivar 169
இந்நிலையில் பீஸ்ட் படப்பிடிப்புக்கு இடையே ரஜினியை நேரில் சந்தித்த நெல்சன் அவரிடம் கதை சொல்லி உள்ளார். நெல்சனின் கதையம்சம் பிடித்து போகவே ரஜினி ஓகே கூறிவிட்டார்..
78
thalaivar 169
சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்தில் அனிரூத் இசையமைக்க ஒப்பந்தமாகியுள்ளார். இது குறித்த மாஸ் ப்ரோமோ வெளியானது. ரஜினி, அனிரூத், நெல்சன் இடம் பெற்றிருந்த இந்த காணொளி செம வைரலானது.
இந்நிலையில் சமீபத்தில் பேட்டியளித்த இயக்குனர் நெல்சன், ஜூலைக்கு பிறகு படம் தொடங்கும் என்று கூறியிருந்தார். முன்னதாக படத்தின் ப்ரீ புரொடக்ஷன் பணிகளுக்கு சிறிது கால அவகாசம் தேவைப்படும் என்பதால் படப்பிடிப்பு ஆகஸ்ட் முதல் நடைபெறும் என தெரிகிறது. இதற்கிடையே ரஜினிகாந்த வழக்கமான செக்கப்பிற்காக அமெரிக்கா செல்ல உள்ளார்.