'தலைவன் தலைவி' வெற்றிக்கு பின்னர் இளம் ஹீரோவோடு கைகோர்க்கும் பாண்டிராஜ்!

Published : Nov 06, 2025, 02:54 PM IST

Thalaivan Thalavi Success Pandiraj Collaborate with Young Hero: 'தலைவன் தலைவி' படத்தின் வெற்றியை தொடர்ந்து, இயக்குனர் பாண்டிராஜ் இயக்க உள்ள அடுத்த பட ஹீரோ மற்றும் கதைக்களம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

PREV
15
பாண்டியராஜின் முதல் பணி:

தமிழ் சினிமாவில் மிகவும் போராடி ஒரு இயக்குனராக மாறி, முதல் படத்திலேயே சிறந்த இயக்குனர் என பெயர் எடுத்ததோடு... தேசிய விருதையும் பெற்றவர் தான் இயக்குனர் பாண்டிராஜ். புதுக்கோட்டையில் பிறந்து வளர்ந்த இவர், தன்னுடைய பள்ளி படிப்பை நிறைவு செய்த பின்னர், சென்னைக்கு வந்தார். பாக்யராஜின் அலுவலகத்தில் ஆபிஸ் பாய்யாக பணியாற்றிய இவருக்கு, கதை எழுதும் திறமை இருப்பதை அறிந்துகொண்ட பாக்யராஜ்... தன்னுடைய வார இதழில் சிறுகதை எழுத வாய்ப்பு கொடுத்தார்.

25
பசங்க திரைப்படம்:

இயக்குனராகும் ஆசை மனதில் எட்டி பார்க்கவே, சேரன், தங்கர்பச்சான், சிம்பு தேவன் ஆகியோரிடம் துணை இயக்குனராக சுமார் 6 படங்களில் பணியாற்றினார். பல போராட்டங்களுக்கு பின்னர் 'பசங்க' படத்தை 2009-ஆம் ஆண்டு இயக்கினார். இந்த படம் குழந்தைகளை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருந்தது. இந்த படம் சிறந்த பீச்சர் ஃபிலிம்முக்கான தேசிய விருதையும், மற்றும் சிறந்த ஸ்கிரீன் பிளேவுக்கான தேசிய விருதையும் வென்றது.

35
பாண்டிராஜ் ரூ.100 வசூல் படம்:

இந்த படத்தை தொடர்ந்து பாண்டிராஜ் இயக்கிய வம்சம், மெரினா, கேடி பில்லா கில்லாடி ரங்கா, பசங்க 2, என அடுத்தடுத்து படங்கள் ஹிட் லிஸ்டில் இணைந்தது. ஆனால் இவரின் போதாத நேரம்... கடந்த சில வருடங்களாக வெற்றி படத்தை இவரால் கொடுக்க முடியாமல் போனது. இந்த நிலையில் தான் இவர் கிராமத்து சாரலுடன், மதுரை மனம் கமழும் கதைக்களத்தில் இயக்கிய 'தலைவன் தலைவி' ரூ.100 கோடி வசூல் சாதனை படைத்தது.

45
தலைவன் தலைவி:

காதல், காமெடி, எமோஷனுடன் வெளியான இந்த படத்தில் விஜய் சேதுபதி ஹீரோவாகவும், அவருக்கு ஜோடியாக நித்தியா மேனன் நடித்திருந்தனர். முக்கிய கதாபாத்திரத்தில், யோகி பாபு, ரோஷ்ணி ஹரிப்ரியன், தீபா ஷங்கர், மீனா நந்தினி, ஆர்.கே.சுரேஷ், அருள் தாஸ் ஆகியோரும் நடித்திருந்தனர். இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து பாண்டிராஜ் இயக்க உள்ள அடுத்த படத்தின் அப்டேட் தற்போது வெளியாகி உள்ளது.

55
அடுத்த பட ஹீரோ யார்?

அதன்படி, பாண்டிராஜ் அடுத்து காதல் கதைக்களத்தில் ஒரு படத்தை இயக்க உள்ளதாகவும், இது இரண்டு ஹீரோக்கள் படமாக உருவாக உள்ளதாம். மெயின் ஹீரோவாக, பிரபல இளம் நடிகர் ஹரிஷ் கல்யாண் நடிக்க உள்ளாராம். மற்ற தகவல்கள் கூடிய விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Photos on
click me!

Recommended Stories