விஜய் சேதுபதி நடித்த தலவன் தலைவி திரைப்படம் அமோக வரவேற்பை பெற்று வருகிறது. நித்யா மேனன் நாயகியாக நடித்துள்ள இப்படத்தை பாண்டிராஜ் இயக்கியுள்ளார். ஏஸ் படத்திற்குப் பிறகு இரண்டு மாதங்கள் கழித்து வெளியான விஜய் சேதுபதி படம் இது. காதல், நகைச்சுவை கலந்த குடும்பத் திரைப்படமான இதில் ஆகாச வீரன் என்ற கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடித்திருக்கிறார். அவரது மனைவியாக, பேரரசி என்ற கதாபாத்திரத்தில் நித்யா மேனன் நடித்துள்ளார். 2022 ஆம் ஆண்டு வெளியான மலையாளப் படமான 19 (1) (a) இல் விஜய் சேதுபதியும், நித்யா மேனனும் நடித்திருந்தனர். அதன்பின் இருவரும் ஜோடி சேர்ந்து நடித்த படம் இதுவாகும்.
24
தலைவன் தலைவி படக்குழு
இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். சத்ய ஜோதி பிலிம்ஸ் சார்பில் டி.ஜி. தியாகராஜன் வழங்கும் இப்படத்தை செந்தில் தியாகராஜன் மற்றும் அர்ஜுன் தியாகராஜன் தயாரித்துள்ளனர். ஜி. சரவணன், சாய் சித்தார்த் ஆகியோர் இணை தயாரிப்பாளர்கள். எம். சுகுமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். கலை இயக்குனராக கே. வீரசமன் பணியாற்றியுள்ளார். குறிப்பாக படத்தில் இடம்பெறும் ஹோட்டலை தத்ரூபமாக செட் அமைத்தது இவர் தான். இப்படத்தின் படத்தொகுப்பு பணிகளை பிரதீப் இ. ராகவ் மேற்கொண்டிருக்கிறார். இதுதவிர சண்டைப் பயிற்சியாளராக கலை கிங்ஸ்டனும், டான்ஸ் மாஸ்டராக பாபா பாஸ்கரும் பணியாற்றி உள்ளனர்.
34
வசூல் வேட்டையாடும் தலைவன் தலைவி
தலைவன் தலைவி திரைப்படத்தில் சரவணன், மைனா நந்தினி, காளி வெங்கட், ஆர்.கே. சுரேஷ், ரோஷினி ஹரிப்ரியன், செம்பன் வினோத், தீபா, யோகிபாபு, செண்ட்ராயன் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. திரையரங்குகளில் வசூல் வேட்டையாடி வரும் தலைவன் தலைவி திரைப்படம் நாளை முதல் தெலுங்கிலும் ரிலீஸ் ஆக உள்ளது. அங்கும் விஜய் சேதுபதிக்கு மவுசு உள்ளதால் இப்படம் வசூல் வேட்டையாடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படம் ரிலீஸ் ஆன மூன்று நாட்களிலேயே பாக்ஸ் ஆபிஸில் 25 கோடிக்கு மேல் வசூலை வாரிக்குவித்து மாஸ் காட்டி இருந்தது.
இந்த நிலையில், தலைவன் தலைவி திரைப்படத்தின் 6ம் நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல் நிலவரம் வெளியாகி உள்ளது. அதன்படி இப்படம் 6 நாட்கள் முடிவில் இந்தியாவில் மட்டும் ரூ.30.9 கோடி வசூலித்துள்ளது. இதுதவிர வெளிநாடுகளில் 10 கோடிக்கு மேல் வசூலை வாரிக்குவித்துள்ளது. இப்படம் நேற்று மட்டும் இந்தியாவில் ரூ.2.15 கோடி வசூலித்து இருக்கிறது. இப்படம் ரிலீஸ் ஆனதில் இருந்து வசூலித்த கம்மியான வசூல் இதுவாகும். நாளை முதல் வீக் எண்ட் ஆரம்பமாவதால் இப்படத்தின் வசூல் மீண்டும் பிக் அப் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது. விஜய் சேதுபதிக்கு இந்த ஆண்டு முதல் வெற்றியை தலைவன் தலைவி படம் பெற்றுத் தந்துள்ளது.