தமிழ் சினிமாவில் பல ரியல் ஜோடிகள் இருந்தாலும் தல அஜித் - ஷாலினி ஜோடிக்கு இருக்கும் ரசிகர்கள் பட்டாளம் இன்றும் குறையவில்லை. இப்போது அஜித்தின் மகள், மகனுக்கு என தனி ரசிகர்கள் உள்ளனர்.
ஆனால் நடிகை ஷாலினிக்கு முன்பே அஜித் நடிகை ஹீராவை காதலித்தார் என்பது அப்போது அனைவராலும் பரவாலாக பேசப்பட்ட செய்தி.
1991 ஆம் ஆண்டு முரளி நடிப்பில் வெளிவந்த ‘இதயம்’ படத்தில் மூலம் தமிழில் அறிமுகமானார்.இந்த படத்திற்கு பிறகு தமிழிலும், தெலுங்கிலும் ஹீராவிற்கு வாய்ப்புகள் குவிந்தது. இந்தியிலும், மலையாளத்திலும் கூட நடித்து வந்தார்.
தல அஜித்துடன் காதல் கோட்டை, தொடரும் ஆகிய படங்களில் நடித்தார். அப்போது தான் இருவரும் காதலித்ததாக கூறப்படுகிறது. ஆனால் ஹீராவின் தாயார் திருமணத்திற்கு சம்மாதிக்காததால் அது வெறும் வதந்தியாகவே முடிந்ததாக சொல்கிறார்கள்.
கடைசியாக 1999ம் ஆண்டு சுயம்வரம் படத்தில் நடித்த ஹீரா, அதன் பின்னர் 2002ம் ஆண்டு புஷ்கர் மாதவ் என்பவரை திருமணம் செய்து கொண்ட ஹீரா, 2006ம் ஆண்டு விவாகரத்து பெற்று தற்போது தனியே வசித்து வருகிறார்.
இந்நிலையில் நடிகை ஹீராவை காதலித்த காலத்தில் தல அஜித் அவருக்கு 10 காதல் கடிதங்களை எழுதியுள்ளாராம். அதில் ஒன்றை ரமேஷ் கண்ணாவும், நானும் எடுத்து பார்த்தோம் என பயில்வான் ரங்கநாதன் தெரிவித்துள்ளார்.