விஜய் நண்பருடன் தீபாவளி கொண்டாடிய கீர்த்தி சுரேஷ்... வைரல் வீடியோவிற்கு பின்னால் உள்ள காரணம் இதுதான்...!

First Published | Nov 19, 2020, 6:50 PM IST

அப்படித்தான் கீர்த்தி சுரேஷும் தனது தீபாவளி ஸ்பெஷல் போட்டோக்களை சோசியல் மீடியாவில் வெளியிட்டார். ஆனால் அதைப் பார்த்த ரசிகர்கள் தான் குழம்பி போயினர். 

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் அண்ணாத்த படத்தில் நடித்து வருகிறார்.
தீபாவளியை முன்னிட்டு திரைப்பிரபலங்கள் பலரும் தங்களது கொண்டாட்ட போட்டோக்களை சோசியல் மீடியாவில் பகிர்ந்து வருகிண்றனர்.
Tap to resize

அப்படித்தான் கீர்த்தி சுரேஷும் தனது தீபாவளி ஸ்பெஷல் போட்டோக்களை சோசியல் மீடியாவில் வெளியிட்டார். ஆனால் அதைப் பார்த்த ரசிகர்கள் தான் குழம்பி போயினர்.
தளபதி விஜய்யின் நெருங்கிய நண்பரும் பிரபல நடிகருமான சஞ்சீவ், ப்ரீத்தி குடும்பத்துடன் தான் கீர்த்தி சுரேஷ் தனது தீபாவளியை கொண்டாடியிருந்தார்.
அதே தீபாவளி கொண்டாட்ட வீடியோவை நடிகை ப்ரீத்தியும் தனது யூ-டியூப் பக்கத்தில் பதிவேற்றியிருந்தார். அன்றிலிருந்தே கீர்த்தி சுரேஷ் உங்களுக்கு சொந்தமா?, அவங்களுக்கு நீங்க என்ன ஆகுதுன்னு? பலரும் கேள்வி எழுப்பி வந்தனர்.
இந்நிலையில் யூ-டியூப் சேனல் ஒன்றிற்கு பேட்டியளித்த ப்ரீத்தி சென்னையில் கீர்த்தி சுரேஷ் என் வீட்டிற்கு பக்கத்து வீட்டில் தான் குடியிருக்கிறார். என் குழந்தைகள் கூட மாலை நேரத்தில் அவருடைய வீட்டிற்கு சென்று விளையாடுவார்கள் என விளக்கமளித்துள்ளார்.

Latest Videos

click me!