ரஜினிக்கு போனில் வாழ்த்து சொன்னாரா அஜித்... நடந்தது என்ன?

First Published | Aug 14, 2020, 9:05 PM IST

அதே நாளில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை போனில் தொடர்பு கொண்ட அஜித் சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக பேசியதாகவும், அவருக்கு வாழ்த்து கூறியதாகவும் தகவல்கள் வெளியாகின.

Thala Ajith Spoke with Super star Rajinikanth in phone?
1975ம் ஆண்டு அபூர்வ ராகங்கள் படத்தில் ஆரம்பித்த ரஜினிகாந்தின் திரைப்பயணம் இன்று அண்ணாத்த வரை வெற்றிக்கொடி கட்டி பறக்கிறது.
இன்றைக்கு புகழின் உச்சத்தில் இருக்கும் ரஜினிகாந்த், திரையுலகில் அடிவைத்து 45 ஆண்டுகள் ஆகின்றன.

45 ஆண்டுகள் திரையுலகில் இருக்கும் ரஜினிகாந்துக்கு வயது 69. ஆனால் இந்த வயதிலும், தான் சார்ந்த சினிமா துறையில் தன்னை நம்பர் 1-ஆக நிலைநிறுத்திக்கொண்டுள்ள ரஜினிகாந்தின் சாதனை அபாரமானது.
ரஜினியின் இந்த சாதனையை அவரது ரசிகர்கள் சமூகவலைதளத்தில் கொண்டாடினர். அதற்காக உருவாக்கப்பட்ட ஸ்பெஷல் காமன் டிபியை ஏ.ஆர்.ரஹ்மான், மோகன்லால், துல்கர் சல்மான் உள்ளிட்டோர் ஆகஸ்ட் 9-ம் தேதி வெளியிட்டனர். இவர்கள் தவிர திரையுலகினரும் ரசிகர்களும் ரஜினிகாந்தை வாழ்த்து மழையில் நனைத்தனர்.
அதே நாளில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை போனில் தொடர்பு கொண்ட அஜித் சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக பேசியதாகவும், அவருக்கு வாழ்த்து கூறியதாகவும் தகவல்கள் வெளியாகின.
ரஜினிகாந்த தனது திரைப்பயணம் குறித்த விஷயங்களை அஜித்துடன் ஷேர் செய்து கொண்டதாக கூறப்பட்டது. இதனால் தல ரசிகர்கள் தலை கால் புரியாமல் சந்தோஷத்தில் துள்ளி குதித்தனர்.
ஆனால் தீர விசாரித்ததில் அப்படியொரு சம்பவமே நடக்கவில்லை என்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அப்படி இருவரும் போனில் பேசிக்கொள்ளவே இல்லையாம். எல்லாம் வீண் வதந்தி என்பது உறுதியாகியுள்ளது.

Latest Videos

click me!