“கைலாசா கரன்சி எப்படியிருக்கும்”... நித்யானந்தா அறிவிப்பு குறித்து பிரபல நடிகர் போட்ட ட்வீட்...!

First Published | Aug 14, 2020, 6:37 PM IST

இந்நிலையில் பிரபல நடிகரும், சோசியல் மீடியாவில் ஆக்டிவாக வலம் வருபவருமான நட்டி நட்ராஜ், தனது ட்விட்டர் பக்கத்தில், அந்த கைலாசா கரன்சி எப்படி இருக்கும். நான் காத்திருக்கிறேன் என பதிவிட்டுள்ளார். 

இந்தியாவில் வழக்குகள் உள்ளதாலும், ஆபத்து ஏற்பட்டுள்ளதாகவும் நாட்டை விட்டு வெளியேறினார் நித்யானந்தா.
அவர் எங்கிருக்கிறார் என போலீஸார் தேடி அலைந்த நிலையில், இண்டர்போல் போலீஸாரும் தேடி வந்தனர். இந்நிலையில் அவர் கைலாசா என்கிற தனி நாட்டை உருவாக்கி விட்டதாகவும், வங்கி, யுனிவர்சிட்டி என பல வகை கட்டுமானங்களை உருவாக்கி விட்டதாக தெறிக்க விட்டார் நித்யானந்தா.
Tap to resize

கைலாசாவிற்கான பணிகள் முடிவடைந்து விட்டதாகவும், தற்போது அது குறித்து தகவல்களை அளிக்க போவதில்லை என்றும் தெரிவித்திருந்தார்.
20 ஆண்டுகால போராட்டத்திற்கு பின்னர் கைலாசத்தை கட்டி அமைக்கும் பணிகள் நிறைவடைந்துள்ளதாகவும், சில நாடுகளுடன் தூதரக ரீதியிலான உறவுகள் தொடங்கி விட்டதாகவும் நித்தியானந்தா கூறியிருந்தார்.ஆனால் கொரோனா பரவி தொடங்கியதில் இருந்து, நித்தியானந்தா பெரிதாக கண்டுகொள்ளபடவில்லை.
ரிசர்வ் பேங்க் ஆப் கைலாசா, கைலாசா நாட்டின் பணம் குறித்த அறிவிப்புகளையும் வரும் விநாயகர் சதுர்த்தியன்று வெளியிட உள்ளதாக நித்யானந்தா அதிரடி அறிவிப்பை வெளியிட்டிருந்தார்.
வாடிகன் வங்கியை மையமாக கொண்டு ரிசர்வ் ரிசர்வ் பேங்க் ஆப் கைலாசா உருவாகி உள்ளது எனவும், உள்நாட்டுக்கு ஒரு கரன்சியும், வெளிநாட்டு பரிவர்த்தனைக்கு ஒரு கரன்சியும் வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும் பல தகவல்களை வெளியிட்டு அனைவரையும் எதிர்பார்ப்பில் ஆழ்த்தியுள்ளார்.
இந்நிலையில் பிரபல நடிகரும், சோசியல் மீடியாவில் ஆக்டிவாக வலம் வருபவருமான நட்டி நட்ராஜ், தனது ட்விட்டர் பக்கத்தில், அந்த கைலாசா கரன்சி எப்படி இருக்கும். நான் காத்திருக்கிறேன் என பதிவிட்டுள்ளார்.

Latest Videos

click me!