இவர் நடிப்பில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான மகாநடி திரைப்படம், தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியாகி இவருக்கு தேசிய விருதை பெற்று தந்தது.
இந்த படத்தை தொடர்ந்து, தரமான கதைகளில் கவனம் செலுத்தி வரும், கீர்த்தி சுரேஷ்... தொடர்ந்து கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கு படங்களை தேர்வு செய்து நடித்து வந்தார்.
இந்நிலையில், இவர் தற்போது தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மூன்று மொழிகளில் உருவாகியுள்ள குட்லக் சகி என்கிற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு 75 சதவீதம் முடிவடைந்து விட்ட நிலையில் கொரோனா பிரச்சனை காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் இதுவரை ஏற்று நடித்திடாத வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அதாவது துப்பாக்கி சுடும் வீராங்கனையாக நடிக்க உள்ளாராம். கிராமத்தில் இருக்கும் ஒரு பெண் எப்படி துப்பாக்கி சுடும் வீராங்கனையாக மாறுகிறார் என்பது தான் இந்த படத்தின் கதை.
நாகேஷ் குக்குனூர் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இந்த படத்தின், ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று வெளியான நிலையில் நாளை ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்த படத்தின் டீசர் வெளியாகி கீர்த்தி சுரேஷ் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்க உள்ளது.
காதல், விளையாட்டு, காமெடி என அணைத்து அம்சங்களுடன் உருவாகியுள்ள இந்தப்படத்தை தில் ராஜ் தயாரித்துள்ளார். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.