பைக் ரேஸர் காஸ்ட்டியூமில் தல அஜித்... ட்விட்டரை தட்டித்தூக்கும் #ThalaLatestPic ஹேஷ்டேக்...!

First Published | Jan 26, 2021, 10:54 AM IST

தற்போது தல அஜித் பைக் ரோஸர் காஸ்ட்டியூமில் இருக்கும் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலாகி வருகின்றன.
 

ஹெச்.வினோத் இயக்கத்தில் தல அஜித் வலிமை படத்தில் நடித்து வருகிறார். படத்தில் அஜித் போலீஸ் அதிகாரியாக நடிப்பதாக பூஜை போட்ட அன்று சொன்னதோடு சரி, அதன் பிறகு எந்த அப்டேட்டும் சொல்லமாட்டேன் என விடப்பிடியாக இருக்கிறார் தயாரிப்பாளர் போனி கபூர்.
அப்டேட் கேட்டு காத்திருந்தவர்களுக்கு விருந்தாக வலிமை திரைப்படம் அம்மா - மகன் சென்டிமென்ட் ப்ளஸ் ஆக்‌ஷன் கதை என்பது மட்டுமே காத்து வாக்குல செய்தியாக கிடைத்துள்ளது.
Tap to resize

அதுமட்டுமின்றி இயக்குநர் ஹெச்.வினோத்திற்கு குழந்தை பிறந்துள்ளதால் ஷூட்டிங்கில் சின்ன பிரேக் விழுந்தது. இதையடுத்து பயன்படுத்திக் கொண்ட அஜித், ஜாலியாக ஒரு பைக் ட்ரிப்பிற்கு கிளம்பினார்.
பைக் ரைடு எல்லாம் அஜித்திற்கு அல்வா சாப்பிடுவது மாதிரி என்பதால் சிக்கிமிற்கு பைக்கிலே கிளம்பியதாக தகவல்கள் வெளியாகின. மொத்தம் 4 ஆயிரத்து 500 கிலோ மீட்டர் தூரம் நண்பர்களுடன் பைக்கிலேயே டிராவல் செய்ய திட்டமிட்டார்.
இடையில் வாரணாசியில் கடைக்காரர் ஒருவருடன் அஜித் எடுத்துக் கொண்ட போட்டோ வெளியாகி தாறுமாறு வைரலானது. வலிமை அப்டேட் தான் கிடைக்கல... தல போட்டோவாவது கிடைச்சதே என குஷியான அஜித் ரசிகர்கள் #Valimai ஹேஷ்டேக்குடன் ட்ரெண்ட் செய்து கொண்டாடினர்.
தற்போது தல அஜித் பைக் ரோஸர் காஸ்ட்டியூமில் இருக்கும் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலாகி வருகின்றன.
தல அஜித்துடன் பைக்கில் வந்த சக நண்பர்களுடன் அவர் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் லைக்குகளை குவித்து வருகிறது.
லைட்டான சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் செம்ம ஸ்டைலிஷாக இருக்கும் அஜித்தின் லேட்டஸ்ட் போட்டோக்களை #ThalaLatestPic என்ற ஹேஷ்டேக்குடன் ரசிகர்கள் ட்விட்டரில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

Latest Videos

click me!