தி பிளஃப் திரைப்படம்
பிரியங்கா சோப்ராவின் 'தி பிளஃப்' திரைப்படம் பிப்ரவரி 25 முதல் அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாகிறது. இப்படம் ஆங்கிலம் மட்டுமின்றி தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளிலும் வெளியாகும். சஸ்பென்ஸ், ஆக்ஷன் நிறைந்த இப்படத்தில் பிரியங்கா சோப்ராவுடன் கார்ல் அர்பன், இஸ்மாயில் குரூஸ் கார்டோவா, சோபியா ஓக்லி கிரீன் மற்றும் டெமுரா மோரிசன் ஆகியோர் நடித்துள்ளனர்.
ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர் திரைப்படம்
அமெரிக்க ஆக்ஷன்-த்ரில்லர் பிளாக் காமெடி படமான 'ஒன் பாட்டில் ஆஃப்டர் அனதர்' பிப்ரவரி 26 முதல் ஜியோ ஹாட்ஸ்டாரில் வெளியாகிறது. இதில் லியோனார்டோ டிகாப்ரியோ, ஷான் பென், பெனிசியோ டெல் டோரோ, ரெஜினா ஹால், டெய்னா டெய்லர் மற்றும் சேஸ் இன்ஃபினிட்டி ஆகியோர் நடித்துள்ளனர். மேலும், 'பிரிட்ஜெர்டன்' சீசன் 4-ன் இரண்டாம் பாகம் பிப்ரவரி 26 அன்று நெட்ஃபிளிக்ஸில் வெளியாகும்.
இக்கீஸ் திரைப்படம்
அகஸ்தியா நந்தாவின் 'இக்கீஸ்' திரைப்படம் பிப்ரவரி 26 முதல் அமேசான் பிரைம் வீடியோவில் பார்க்கலாம். இதில் தர்மேந்திரா, சிமர் பாட்டியா, ஜெய்தீப் அஹ்லாவத் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். மேலும், தெலுங்கு படமான 'ஸ்ரீ சிதம்பரம் காரு' பிப்ரவரி 26 முதல் ETV Win-ல் வெளியாகிறது. இதில் வம்சி தும்மாலா மற்றும் சந்தியா வசிஷ்டா நடித்துள்ளனர்.
அக்யூஸ்டு திரைப்படம்
கொங்கனா சென் சர்மா மற்றும் பிரதிபா ராண்டாவின் 'அக்யூஸ்டு' திரைப்படம் பிப்ரவரி 27 முதல் நெட்ஃபிளிக்ஸில் வெளியாகிறது. இது ஒரு த்ரில்லர் படம். மேலும், மலையாள படமான 'ரோஸ்லின்: சீக்ரெட் ஸ்டோரீஸ் அன்ஃபோல்ட்' பிப்ரவரி 27 முதல் ஜியோ ஹாட்ஸ்டாரில் வெளியாகிறது. 'அந்தா பியார் 2.0' திரைப்படம் பிப்ரவரி 28 முதல் ஜீ5-ல் பார்க்கலாம்.