கர்ப்பமாகி 2 வருஷம் ஆச்சு இன்னும் குழந்தை பிறக்கல... சன் டிவி சீரியல் பரிதாபங்கள்

Published : Feb 24, 2026, 12:51 PM IST

சின்னத்திரை சீரியல்களில் லாஜிக் மிஸ்டேக்குகள் எல்லைமீறி சென்றுகொண்டிருக்கின்றன, குறிப்பாக சன் டிவியின் சிங்கப்பெண்ணே சீரியலில் மிகப்பெரிய லாஜிக் ஓட்டை இருக்கிறது. அதைப்பற்றி பார்க்கலாம்.

PREV
15
Singappenne Serial Logic Mistake

சீரியல்கள் என்றாலே அழுகாச்சியாக இருக்கும் என்கிற காலம் போய் தற்போது சினிமாவுக்கு நிகராக விறுவிறுப்பான கதைக்களத்துடன் செல்லும் அளவுக்கு சின்னத்திரை சீரியல்கள் மாறி இருக்கின்றன. இதன் காரணமாகவே சீரியல் பார்ப்போர் எண்ணிக்கையும் அதிகரித்த வண்ணம் உள்ளது. முன்பெல்லாம் டிவியில் மட்டுமே பார்க்க முடிந்த சீரியல், தற்போது கையில் போன் இருந்தால் எங்கு வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் பார்த்துக் கொள்ளலாம் என்கிற நிலை உருவாகி இருக்கிறது. இதன் காரணமாக சீரியல்கள் வாரத்தின் ஏழு நாட்களும் ஒளிபரப்பப்பட்டு வருகின்றன.

25
7 நாளும் ஒளிபரப்பாகும் சிங்கப்பெண்ணே

சீரியல்களை ஒளிபரப்புவதில் முன்னணியில் இருக்கும் சேனல் என்றால் அது சன் டிவி தான். அதில் வாரத்தில் 7 நாட்களும் ஒளிபரப்பாகும் சீரியல்களில் சிங்கப்பெண்ணே சீரியலும் ஒன்று. இந்த சீரியல் கடந்த மாதம் வரை தினந்தோறும் இரவு 9 முதல் 9.30 மணி வரை ஒளிபரப்பாகி வந்தது. ஆனால் அண்மையில் இதன் நேரம் மாற்றப்பட்டு, இரவு 9.30 முதல் 10 மணிவரை தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியல் கடந்த ஆண்டு நம்பர் 1 சீரியலாக இருந்து வந்தது. ஆனால் கடந்த சில மாதங்களாக இந்த சீரியல் முதலிடத்தை நழுவவிட்டு உள்ளது. அதற்கு காரணம் இதன் லாஜிக் மிஸ்டேக் தான்.

35
சிங்கப்பெண்ணே சீரியல்

சிங்கப்பெண்ணே சீரியலில் நாயகியாக மனிஷா மகேஷ் நடிக்கிறார். அவர் ஆனந்தி என்கிற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அவருக்கும் அன்புவுக்கும் இடையேயான கெமிஸ்ட்ரி வேற லெவலில் ஒர்க் அவுட் ஆனது. அன்பு - ஆனந்தி ஜோடிக்காகவே இந்த சீரியலை ஏராளமானோர் பார்த்து வந்தனர். பல்வேறு தடைகளுக்கு பின்னர் அன்புவை திருமணம் செய்துகொண்ட ஆனந்தி, இன்னும் தனக்கான நீதி கிடைக்காமல் போராடி வருகிறார். திருமணத்துக்கு முன்னர் ஹாஸ்டலில் நடைபெற்ற பார்ட்டியில் ஆனந்திக்கு மயக்க மருந்து கொடுத்து ஒரு மர்ம நபர் அவரின் கர்ப்பை சூரையாடிவிட்டார்.

45
ஆனந்தி கர்ப்பமாகி 2 வருஷம் ஆச்சு

இதையடுத்து கர்ப்பமான ஆனந்தி, தன்னுடைய கர்ப்பத்திற்கு காரணமானவர் யார் என்பதை கண்டுபிடிக்க களத்தில் இறங்கினார். ஆனால் அவர் இன்னும் தன்னுடைய கர்ப்பத்திற்கு காரணமானவனை கண்டுபிடிக்கவில்லை. இன்னும் சில வாரங்களில் அதுகுறித்த உண்மை வெளிச்சத்துக்கு வரும் என ஆடியன்ஸ் கிட்டத்தட்ட 2 ஆண்டுகளாக காத்திருக்கிறார்கள். ஆனந்தி கர்ப்பமாகி இன்றுடன் இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டது. கடந்த 2024-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 24-ந் தேதி வெளியான எபிசோடில் தான் ஆனந்தி கர்ப்பமாக இருக்கும் தகவலை டாக்டர் உறுதி செய்யும் காட்சிகள் இடம்பெற்று இருந்தன.

55
லாஜிக் மிஸ்டேக்

அப்படிப் பார்க்கையில், அவர் கர்ப்பமாகி 2 ஆண்டுகள் இன்றுடன் 2 ஆண்டுகள் ஆகிவிட்டது. ஆனால் இதுவரை ஆனந்திக்கு குழந்தை பிறக்கவில்லை. இதை நோட் பண்ணிய ரசிகர்கள், ஒரு சீரியலாக இருந்தாலும் அதில் ஒரு நியாயம் வேண்டாமா... அதுமட்டுமின்றி இந்த சீரியலில் ஆனந்தி கர்ப்பமாகி 2 ஆண்டுகள் ஆனாலும் அவர் வயிறு பெரிதாகாமல் இருக்கிறார். இதையும் சுட்டிக்காட்டி உள்ள ரசிகர்கள், எங்களையெல்லாம் பார்த்தால் உங்களுக்கு முட்டாள் போல தெரிகிறதா, தயவு செஞ்சு லாஜிக்கோட சீரியல் எடுங்க, இல்லேனா நிறுத்திடுங்க என காட்டமாக பதிலடி கொடுத்து வருகிறார்கள்.

Read more Photos on
click me!

Recommended Stories