ஆனந்த் எல் ராய் இயக்கத்தில் கிருத்தி சனோன் மற்றும் தனுஷ் நடிப்பில் வெளியாகி வெற்றிநடைபோட்டு வரும் தேரே இஷ்க் மெய்ன் திரைப்படத்தின் பாக்ஸ் ஆபிஸ் வசூல் நிலவரத்தை பார்க்கலாம்.
கிருத்தி சனோன் மற்றும் தனுஷ் நடித்த 'தேரே இஷ்க் மெய்ன்' திரைப்படம் வெள்ளிக்கிழமை திரையரங்குகளில் வெளியானது. படம் வெளியாகி 3 நாட்கள் ஆன நிலையில், அதன் மூன்றாவது நாள் வசூல் விபரம் வெளியாகியுள்ளது. இயக்குனர் ஆனந்த் எல் ராய் இயக்கிய 'தேரே இஷ்க் மெய்ன்' முதல் நாளில் இருந்தே பாக்ஸ் ஆபிஸில் அமோக வசூல் செய்து வருகிறது. அதன்படி இப்படம் மூன்றாவது நாளில் எவ்வளவு வசூல் செய்தது என்கிற விவரம் வெளியாகி உள்ளது.
24
தேரே இஷ்க் மெய்ன் வசூல்
தனுஷின் 'தேரே இஷ்க் மெய்ன்' முதல் நாளில் ரூ.16 கோடியுடன் தொடங்கியது. இரண்டாம் நாளான சனிக்கிழமை ரூ.17 கோடி வசூலித்தது. பின்னர் மூன்றாவது நாளான நேற்று மற்ற நாட்களை காட்டிலும் அதிக வசூலை வாரிக்குவித்து உள்ளது. அதன்படி நேற்று ஒரே நாளில் இப்படம் இந்தியாவில் ரூ.18.75 கோடி வசூல் செய்துள்ளது. இதன்மூலம் ஒட்டுமொத்தமாக இந்திய பாக்ஸ் ஆபிஸில் இதுவரை ரூ.51.75 கோடி வசூல் செய்துள்ளது 'தேரே இஷ்க் மெய்ன்'.
34
தனுஷின் ரொமாண்டிக் படம்
'தேரே இஷ்க் மெய்ன்' ஒரு மியூசிக்கல் ரொமான்டிக் டிராமா படம். இதை ஆனந்த் எல் ராய் இயக்கியுள்ளார். இதன் திரைக்கதையை ஹிமான்ஷு ஷர்மா மற்றும் நீரஜ் யாதவ் எழுதியுள்ளனர். இது 'ராஞ்சனா' (2013) படத்தின் தொடர்ச்சியாக கூறப்படுகிறது. 'தேரே இஷ்க் மெய்ன்' படத்தில் தனுஷ் மற்றும் கிருத்தி சனோன் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இவர்களுடன் பிரகாஷ் ராஜ், தோட்டா ராய், பிரியான்ஷு, ரவி கிஷன், சித்தரஞ்சன் திரிபாதி, ஜெயா பட்டாச்சார்யா, வினீத் குமார் சிங் ஆகியோரும் நடித்துள்ளனர்.
இயக்குனர் ஆனந்த் எல் ராய் இயக்கிய 'தேரே இஷ்க் மெய்ன்' ரூ.85 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டுள்ளது. ஆனந்த் எல் ராய், ஹிமான்ஷு ஷர்மா, பூஷன் குமார் ஆகியோர் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளனர். இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து உள்ளார். தனுஷ் இந்தியில் நடித்துள்ள மூன்றாவது படம் இதுவாகும். இதற்கு முன்னதாக ராஞ்சனா மற்றும் ஷமிதாப் ஆகிய படங்களில் நடித்திருந்தார் தனுஷ். அந்த இரண்டு படங்களும் ஹிட்டான நிலையில், மூன்றாவது வெற்றியை நோக்கி நகர்ந்து வருகிறார் தனுஷ்.