தடம், தடையற தாக்க, மீகாமன் என வித்தியாசமான திரில்லர் படங்களை இயக்கி மக்கள் மத்தியில் பேமஸ் ஆனவர் இயக்குனர் மகிழ் திருமேனி. இவர் கடந்த 2019-ம் ஆண்டு உதயநிதியுடன் ஒரு படத்தில் கமிட் ஆனார். அந்த படம் தான் ‘கலகத் தலைவன்’. இப்படத்தின் ஷூட்டிங் கடந்த 2019-ம் ஆண்டே தொடங்கப்பட்ட போதும், இடையே கொரோனா ஊரடங்கு போன்ற காரணங்களால் முடிவடைய மூன்று ஆண்டுகள் ஆனது.
கலகத் தலைவன் படத்தில் நடிகர் உதயநிதி ஸ்டாலினுக்கு ஜோடியாக நிதி அகர்வால் நடித்துள்ளார். பிக்பாஸ் பிரபலம் ஆரவ் இப்படத்தில் வில்லனாக நடித்து இருக்கிறார். அதுமட்டுமின்றி மெட்ராஸ் பட நடிகர் கலையரசனும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். திரில்லர் கதையம்சம் கொண்ட இப்படத்திற்கு அரோல் கரோலி இசையமைத்து உள்ளார்.
இதையும் படியுங்கள்... டிசம்பரில் ரிலீஸ் இல்லை... தள்ளிப்போனது தனுஷின் வாத்தி - புது ரிலீஸ் தேதி அறிவிப்பு
ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் தயாரித்துள்ள கலகத் தலைவன் திரைப்படம் இன்று உலகமெங்கும் ரிலீசாகி உள்ளது. இதனிடையே இப்படத்தின் சிறப்பு காட்சியை தமிழக முதல்வரும், உதயநிதியின் தந்தையுமான மு.க.ஸ்டாலின் நேற்று சென்னையில் கண்டுகளித்தார். அப்போது அவரது மனைவி துர்கா ஸ்டாலினும் உடன் இருந்தார்.