RRR : பார்ப்பவர்களுக்கு தேசபக்தி கனலை உணரவைக்கிறது ஆர்.ஆர்.ஆர் - எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் புகழாரம்

Published : Apr 04, 2022, 10:45 AM IST

RRR : சினிமா என்பது பொழுதுபோக்கு என்ற அம்சம் இருந்தாலும் கூட ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் சரித்திரத்தின் சில வரலாற்று பக்கங்களை புரட்டிப் பார்க்கும் அனுபவத்தை அளிப்பதாக வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

PREV
14
RRR : பார்ப்பவர்களுக்கு தேசபக்தி கனலை உணரவைக்கிறது ஆர்.ஆர்.ஆர் - எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் புகழாரம்

ராஜமவுலி இயக்கத்தில் ராம்சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் இணைந்து நடித்துள்ள படம் ஆர்.ஆர்.ஆர். டிவிவி தனய்யா ரூ.500 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக தயாரித்துள்ள இப்படம் கடந்த மாதம் 25-ந் தேதி திரையரங்குகளில் ரிலீசானது. வெளியானது முதலே அமோக வரவேற்பை பெற்று வரும் இப்படம் வசூலையும் வாரிக்குவித்து சாதனை படைத்து வருகிறது.

24

ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் தெலுங்கு மொழியில் உருவாக்கப்பட்டு இருந்தாலும், தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் டப்பிங் செய்து பான் இந்தியா படமாக வெளியிடப்பட்டு உள்ளது. பாக்ஸ் ஆபிஸில் பட்டைய கிளப்பி வரும் இப்படம் ரிலீசான 8 நாட்களில் 800 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து சாதனை படைத்து உள்ளது.
 

34

ஆர்.ஆர்.ஆர் படத்துக்கு ரசிகர்கள் வரவேற்பு கொடுப்பதைப் போல் திரையுலக பிரபலங்களும் இப்படத்திற்கு பார்த்து பாராட்டி வருகின்றனர். பாலிவுட் முதல் கோலிவுட் வரை ஏராளமான பிரபலங்கள் இப்படத்தை புகழ்ந்து பேசி உள்ளனர். அந்த வகையில் தற்போது கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ.வான வானதி சீனிவாசன் ஆர்.ஆர்.ஆர் படத்தை பற்றி டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

44

அதில் அவர் கூறியிருப்பதாவது: “சினிமா என்பது பொழுதுபோக்கு என்ற அம்சம் இருந்தாலும் கூட ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் சரித்திரத்தின் சில வரலாற்று பக்கங்களை புரட்டிப் பார்க்கும் அனுபவத்துடன், தேசபக்தி கனலை உணரும் பரவசத்தை பார்ப்பவர்களுக்கு அளிப்பதாக காண்கிறேன். 75-வது சுதந்திர தினத்திற்கு ஒரு மிகச்சிறந்த அர்ப்பணிப்பு” என பதிவிட்டுள்ளார்.

இதையும் படியுங்கள்... Grammy Awards :கிராமி விருதுகள் நிகழ்ச்சியில் மகனுடன் மாஸாக என்ட்ரி கொடுத்த ஏ.ஆர்.ரகுமான்- வைரலாகும் போட்டோ

Read more Photos on
click me!

Recommended Stories