இந்த ஒரு தமிழ் படத்தால் 38 விவாகரத்து வழக்குகள் வாபஸ் பெறப்பட்டுள்ளன... சினிமா நிகழ்த்திய மேஜிக்..!

Published : Jan 30, 2026, 01:10 PM IST

சினிமா, மனிதர்கள் வாழ்க்கையில் பல அதிசயங்களை நிகழ்த்தும். அப்படி ஒரு அரிதான சம்பவத்தை பற்றி தான் இந்த தொகுப்பில் பார்க்க உள்ளோம். அதுவும் ஒரு தமிழ் படத்தை பற்றி தான் பார்க்க இருக்கிறோம்.

PREV
14
Tamil Movie Inspires 38 Couples to Withdraw Divorce Cases

சினிமா பார்த்து கெட்டுப் போவார்கள் என்று சொல்வதைக் கேட்டிருப்பீர்கள். ஆனால், இந்த ஒரு தமிழ் படத்தால் 38 விவாகரத்து வழக்குகள் வாபஸ் பெறப்பட்டுள்ளன என்றால் நம்புவீர்களா? நம்பித்தான் ஆக வேண்டும். ஏனென்றால் இது உண்மை. அப்படி என்ன இருக்கிறது இந்தப் படத்தில்? அதன் கதை என்னவென்று இந்த தொகுப்பில் விரிவாக பார்ப்போம்.

24
என்ன படம் அது?

அந்தப் படம் வேறெதுவுமில்லை, ‘இறுகப்பற்று’ தான். தமிழ் படமான இதை யுவராஜ் தயாளன் இயக்கியுள்ளார். 2023ல் வெளியான இதில், ஷ்ரத்தா ஸ்ரீநாத், விக்ரம் பிரபு நடித்துள்ளனர். இறுகப்பற்று என்றால் இறுக்கமாகப் பிடித்துக்கொள் என அர்த்தம். இயக்குநர் யுவராஜ் தயாளன், திருமண வாழ்வில் உள்ள ஒவ்வொரு சூழலையும் நம் கதை போல காட்டியுள்ளார். மற்ற படங்களிலிருந்து இது வேறுபட்டு, நிஜ வாழ்க்கைக்கு நெருக்கமாக உள்ளது. உங்கள் துணையுடன் பார்க்க வேண்டிய படம்.

34
மூன்று உறவுகளின் சிக்கல்களை பேசும் படம்

திருமண வாழ்வின் வெவ்வேறு கட்டங்களில் உள்ள மூன்று ஜோடிகளின் கதை இது. சண்டையிடாத தம்பதி, காதலித்து மணந்து புறக்கணிக்கப்படும் ஜோடி, மனைவி குண்டாகிவிட்டாள் என திட்டும் கணவன் என மூன்று உறவுகளின் சிக்கல்களைப் பேசுகிறது. திருமண ஆலோசகரான மித்ரா, மற்றவர்களுக்கு ஆலோசனை கூறி, தன் வாழ்வில் கச்சிதமாக இருக்க முயல்கிறார். ரங்கேஷ், மனைவி குண்டானதால் விவாகரத்து கேட்கிறான். ஆனால், பிரச்சனை மனைவியிடம் இல்லை.

44
எந்த ஓடிடியில் பார்க்கலாம்?

திவ்யா மற்றும் அர்ஜுன் காதலித்து மணந்தவர்கள். பின்னாளில், கணவனுடன் பேசவே பிடிக்காத மன அழுத்தத்திற்கு திவ்யா ஆளாகிறாள். திருமண ஆலோசகரை நாடும் அர்ஜுன், தன் தவறை உணர்கிறான். எதற்கெடுத்தாலும் விவாகரத்து என நினைப்பவர்கள், கச்சிதமாக வாழ நினைப்பவர்கள், வாழ்க்கையின் அழுத்தத்தை உறவில் காட்டுபவர்கள் என அனைவரும் பார்க்க வேண்டிய படம். இப்படம் நெட்ஃபிளிக்ஸில் உள்ளது. மிஸ் பண்ணாம பாருங்க.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Photos on
click me!

Recommended Stories