நடிகர் நெப்போலியன் தமிழ் திரையுலகில் பல்வேறு வெற்றிப்படங்களில் நடித்திருக்கிறார். அதுமட்டுமின்றி அரசியலிலும் பிசியாக இருந்து வந்த நெப்போலியன் மத்திய அமைச்சராகவும் பதவி வகித்துள்ளார். இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் குடும்பத்துடன் அமெரிக்காவில் குடியேறிய நெப்போலியன் படங்களில் நடிப்பதை குறைத்துக் கொண்டு, அங்கு பிசினஸ் செய்ய தொடங்கிவிட்டார்.
தற்போது அமெரிக்காவில் சக்சஸ்புல் பிசினஸ் மேனாக வலம் வரும் நெப்போலியனுக்கு குணால், தனுஷ் என இரண்டு மகன்கள் உள்ளனர். இதில் தனுஷ் என்பவர் மாற்றுத்திறனாளி ஆவார். இவர் யூடியூப் பிரபலம் இர்பானின் தீவிர ரசிகராம். தற்போது அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இர்பானை, வீட்டிற்கு அழைத்துவர ஆசைப்பட்டாராம் தனுஷ்.
மகனின் ஆசைக்கு ஏற்ப இர்பானிடம் பேசி வீட்டிற்கு அழைத்து வந்த நெப்போலியன், அவருக்கு தனது வீட்டை சுற்றிக் காட்டி உள்ளார். அதனை வீடியோவாக எடுத்து தனது யூடியூபில் வெளியிட்டுள்ளார் இர்பான். அந்த வீடியோ தான் டிரெண்டிங்கில் உள்ளது. இந்த வீட்டை தனது மகன் தனுஷுக்காக பார்த்து பார்த்து கட்டியுள்ளார் என்று சொல்வதை விட செதுக்கியுள்ளார் என்று சொல்வது தான் சரியாக இருக்கும். அந்த அளவுக்கு மாடர்ன் அரண்மனை போல் உள்ளது நெப்போலியனின் அமெரிக்க வீடு. அந்த வீட்டில் உள்ள சிறப்பம்சங்களை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.