ஒன்றல்ல... இரண்டல... 7 விருதுகளை வாங்கி குவித்த பிரபல தமிழ் நடிகரின் மகன்..!

சமீப காலமாக பிரபலங்களின் வாரிசுகள் பலர், விளையாட்டு துறை மீது அதிக ஆர்வம் காட்ட துவங்கி விட்டனர். அந்த வகையில் நடிகர் மாதவன் (madhavan) மகன் வேதந்த் (Vedant)பெங்களூரில் நடந்த நீச்சல் போட்டியில் 7 விருதுகளை வாங்கி குவித்துள்ளார். இவருக்கு ரசிகர்கள் மற்றும் பிரபலங்களின் வாரிசுகள் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

பிரபல நடிகர் மாதவன் மகன் வேதாந்த், சர்வதேச நீச்சல் போட்டியில் இந்தியாவின் சார்பில் கலந்து கொண்டு பதக்கங்களை வாங்கி குவித்து வருகிறார்.
 

அந்த வகையில், பிரபல நடிகர் மாதவன் மகன் வேதாந்த், பல சர்வதேச நீச்சல் போட்டியில் இந்தியாவின் சார்பில் கலந்து கொண்டு பதக்கங்களை வாங்கி குவித்து, அவரது தந்தைக்கு பெருமை சேர்த்து வருகிறார்.


அந்த வகையில், ஏற்கனவே பிரபல நடிகர் மாதவனின் மகன் , லவிட்டன் ஓபன் ஸ்விம்மிங் போட்டியில் கலந்து கொண்டு, இந்தியாவுக்காக வெண்கலம் பதக்கத்தை வென்று பெருமை சேர்த்த நிலையில் இப்போது, 7 பதக்கங்களை வென்றுள்ளார்.

சமீபத்தில் பெங்களூரில் நடந்த நீச்சல் போட்டியில், பல்வேறு பிரிவுகளில் நடந்த நீச்சல் போட்டியில்... மாதவன் மகன் மொத்தம் 7 பதக்கங்களை வென்றுள்ளார்.

இதை தொடர்ந்து ரசிகர்கள் பலர் மாதவனின் மகனுக்கு தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். உண்மையில் இது பெருமை பட வேண்டிய விஷயம் தானே...

Latest Videos

click me!