பிக்பாஸ் நிகழ்ச்சி என்றாலே எப்போதும், பரபரப்புக்கும், விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது. அதே நிலை தான் பிக்பாஸ் 5 சீசனிலும் துவங்கி வருகிறது.
முதல் வாரத்தில் யாரும் எதிர்பாராத விதமாக, மலேசிய மாடலும், சமூக வலைதள பிரபலமுமான நாடியா சங் வெளியேறினார். வெளியே வந்த இவர், இங்கிருந்து சென்று வந்த செலவு கூட தனக்கு சம்பளமாக கிடைக்கவில்லை என பேட்டி ஒன்றில் வேதனையோடு தெரிவித்திருந்தார்.
மேலும் நாடியாவின் குடும்பத்தினரும், மலேசிய மக்களால் தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஓட்டு போடமுடியாது காரணத்தால் தான் வெளியேறியதாக கூறி இருந்தனர்.
நாம் எதிர்பார்த்ததை விட, படு சூடாகவே சென்று கொண்டிருக்கும் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் இரண்டாவது போட்டியாளராக யார் வெளியேறுவார் என மிகப்பெரிய குழப்பம் நீடித்தது.
இந்நிலையில் நேற்றைய தினம், ஒவ்வொரு புரோமோவில் தன்னுடைய முகத்தை தவறாமல் பதிவு செய்து வந்த அபிஷேக் தான் வெளியேற்றப்பட்டார். இவரை காப்பாற்ற சில போட்டியாளர்கள் முயற்சி செய்தும் அது முடியாமல் போனது.
ஒவ்வொரு எபிஸோடிலும் கன்டென்ட் கொடுத்து வந்த அபிஷேக் வெளியேறியது, அவரது ரசிகர்களுக்கு சற்று வருத்தமான தகவல் என்றே கூறலாம்.
இது ஒரு புறம் இருக்க தற்போது அபிஷேக் மூன்று வாரத்திற்கு வாங்கிய சம்பளம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதாவது இவரது ஒரு வார சம்பளம் 1.75 லட்சம் என்றும், மூன்று வாரத்திற்கு சேர்த்து 5.25 லட்சம் சம்பளத்தோடு வெளியேறியுள்ளாராம்.