
திரைப்பட நட்சத்திரங்கள்,சமீப காலமாக சின்னத்திரையில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவது புதிய டிரெண்டாக மாறி வருகிறது. டிபேட் நிகழ்ச்சிகள், நடன நிகழ்ச்சிகள், ரியாலிட்டி நிகழ்ச்சிகளை பிரபலங்கள் தொகுத்து வழங்கும் போது அந்த நிகழ்ச்சி அதிகம் கவனிக்கப்படுகின்றன. இது தமிழ் திரையுலகில் மட்டும் அல்ல, தெலுங்கு திரையுலகிலும் இது போல் பல நிகழ்ச்சிகளை பிரபலங்கள் தொகுத்து வழங்கி வருகிறார்கள்.
அந்த வகையில், நாகார்ஜுனா பிக் பாஸ் நிகழ்ச்சியையும், பாலய்யா அன்ஸ்டாப்பபிள் நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கி வருகிறார்கள். ஆனால் ஒரு சில பிரபலங்கள் தாங்கள் தொகுத்து வழங்கி வரும், நிகழ்ச்சிகளிலில் இருந்து பாதியிலேயே வெளியேறி சில சர்ச்சையில் சிக்குகிறார்கள். அந்தப் பட்டியலில் தமன்னா, நாகபாபு, சேகர் மாஸ்டர் உள்ளிட்ட சிலர் உள்ளனர்.
Netflix-ல் வெளியான டாப் 10 படங்கள் & வெப் சீரிஸ்! புஷ்பா 2 செய்த சாதனை!
தமன்னா பாட்டியா மாஸ்டர் செஃப் சீசன் 1 நிகழ்ச்சி மூலம் சின்னத்திரையில் தொகுப்பாளராக மாறினார். ஆனால் தமன்னாவின் சம்பளப் பிரச்சினை காரணமாக, அந்த நிகழ்ச்சியை பாதியிலேயே விட்டு விலகினார். தமன்னாவின் இந்த செயல் சர்ச்சைக்கு வழிவகுத்தது. பின்னர் தனக்கு கொடுப்பதாகச் சொன்ன சம்பளத்தை நிர்வாகம் கொடுக்காததால் தான, அந்த நிகழ்ச்சியை விட்டு விலகியதாக தமன்னா கூறினார்.
மெகா பிரதர் நாகபாபு, கொனிடெலா ஜபர்தஸ்த் நிகழ்ச்சிக்கு ஏழு ஆண்டுகள் நடுவராக இருந்தார். ஆனால் நிர்வாகத்துடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் நாகபாபு பாதியிலேயே இந்த நிகழ்ச்சியை விட்டு விலகினார். ஜபர்தஸ்த் என்பது தெலுங்கு சின்னத்திரை வரலாற்றில் ஒரு மைல்கல் என்று சொல்லலாம். இந்த நிகழ்ச்சிக்கு அதிக டிஆர்பி ரேட்டிங்ஸ் கிடைத்தன. நிர்வாகத்துடன் பல்வேறு விஷயங்களில் தனக்கு உடன்பாடு இல்லை என்று நாகபாபு விளக்கம் கொடுத்தார்.
50 வருசமா சாப்பாடே சாப்பிடாமல் இருக்கேன்? அதிர்ச்சி கொடுத்த பழம்பெரும் நடிகை விஜயகுமாரி!
டோலிவுட்டில் பிரபல நடன இயக்குனர்களில் சேகர் மாஸ்டரும் ஒருவர். சேகர் மாஸ்டர் டி 1, உட்பட பல சின்னத்திரை நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார். இருப்பினும், சேகர் மாஸ்டர் அப்போது டி 1 கிங்ஸ் வெர்சஸ் குயின்ஸ் நிகழ்ச்சியை பாதியிலேயே விட்டுவிட்டார். மற்றொரு பிரபல சேனலில் கிடைத்த வாய்ப்புக்காக சேகர் மாஸ்டர் இந்த நிகழ்ச்சியை விட்டு வெளியேறியதாக விமர்சனங்கள் எழுந்தன.
அனசூயா ஜபர்தஸ்த் நிகழ்ச்சிக்கு தொகுப்பாளினியாக இருந்தார். ஆனால் பாதியிலேயே அந்த நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார். அனசூயா இந்த நிகழ்ச்சியை விட்டு விலகுவதற்கு பல காரணங்கள் கூறப்பட்டன. தன் மீது வைக்கப்படும் மோசமான விமர்சனம், இரட்டை அர்த்த கொண்ட வசனங்களால் அவர் மனதளவில் மிகவும் வருத்தப்பட்டு வெளியேறினார். பின்னர் திரைப்படங்களில் கவனம் செலுத்த துவங்கிய இவர் டோலிவுட் மற்றும் கோலிவுட் படங்களில் நடித்து வருகிறார்.
படத்துல தான் மனுஷன் அப்படி! நிஜத்தில் சொக்க தங்கம் - ஆனந்தராஜ் பற்றி பலரும் அறிந்திடாத தகவல்!
டோலிவுட்டில் சர்ச்சைக்குரிய தொகுப்பாளர்களில் ரவியும் ஒருவர். ரவியைச் சுற்றி பல சர்ச்சைகள் உள்ளன. ரவி பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை பாதியிலேயே விட்டுவிட்டார். பிக் பாஸ் வாய்ப்புக்காக ஹேப்பி டேஸ் நிகழ்ச்சியை விட்டுவிட்டார். பட்டாஸ், டி 1 சாம்பியன்ஸ் நிகழ்ச்சிகளுக்கும் ரவி விடை கொடுத்தார். டி 1 சாம்பியன்ஸில் இருந்து ரவி விலகிய பிறகு அந்த வாய்ப்பு ஹைப்பர் ஆதிக்கு கிடைத்தது.
டோலிவுட்டின் கவர்ச்சியான தொகுப்பாளினிகளில் வர்ஷினியும் ஒருவர். வர்ஷினி காமெடி ஸ்டார்ஸ் நிகழ்ச்சியை பாதியிலேயே விட்டு வெளியேறினார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ளதாக கூறப்பட்டது. ஆனால் அவர் கலந்து கொள்ளவில்லை. தற்போது பட வாய்ப்புகளை தீவிரமாக தேடி வருகிறார்.
விஜயகாந்த் விஷயத்தில் நான் செய்த மிகப்பெரிய தவறு; இயக்குனர் விக்ரமன் வருத்தம்!