கொரோனாவில் இருந்து குணமடைந்த தமன்னா..!

First Published | Oct 6, 2020, 3:07 PM IST

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு அதிலிருந்து மீண்டு சிகிச்சை பெற்று வந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் சமீபத்தில் சிகிச்சை பலனின்றி காலமானார். அந்த துக்கத்தில் இருந்து ரசிகர்கள், திரைத்துறையினர் மீள்வதற்குள் பிரபல நடிகை தமன்னாவிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட தகவல் ஒட்டு மொத்த ரசிகர்களையும் அதிர்ச்சியடைய செய்தது.
 

கொரோனா வைரஸின் ஆட்டத்தை ஆரம்பித்து வைத்த சீனா தற்போது இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது. ஆனால் அங்கிருந்து ஆரம்பித்த கொரோனா வைரஸின் கொடூர ஆட்டம் இப்போது இந்தியாவை பாடாய் படுத்தி வருகிறது.
ஷூட்டிங் இல்லாததால் வீட்டை விட்டு எங்கும் செல்லாமல் உள்ளேயே இருந்தாலும் சினிமாக்கரர்களை கொரோனா விடுவதாக இல்லை. அமிதாப் பச்சன் மற்றும் அவரது குடும்பத்தினர், இயக்குநர் ராஜமெளலி என இந்த தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை படுவேகமாக அதிகரித்து வருகிறது.
Tap to resize

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு அதிலிருந்து மீண்டு சிகிச்சை பெற்று வந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் சமீபத்தில் சிகிச்சை பலனின்றி காலமானார். அந்த துக்கத்தில் இருந்து ரசிகர்கள், திரைத்துறையினர் மீள்வதற்குள் பிரபல நடிகைக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் தமன்னாவின் அப்பா, அம்மாவிற்கு கடந்த ஆகஸ்ட் மாதம் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதுகுறித்து தனது சோசியல் மீடியா பக்கங்களில் பதிவிட்டுள்ள அவர், கடந்த ஒரு வாரமாக எனது பெற்றோருக்கு கொரோனா அறிகுறிகள் இருந்தன. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வீட்டில் உள்ள உறவினர்கள், வேலையாட்கள் அனைவரும் பரிசோதனை செய்து கொண்டோம். சோகமளிக்கும் விதமாக எனது பெற்றோர்களுக்கு பாசிட்டிவ் ஆகியுள்ளது” என சோகத்துடன் பதிவிட்டிருந்தார்.
பின்னர் உரிய சிகிச்சைக்கு பின் தமன்னாவின் பெற்றோர் கொரோனா தொற்றில் இருந்து மீண்டனர்.
இந்நிலையில் வெப்தொடர் ஒன்றின் படப்பிடிப்பில் இருந்த தமன்னாவுக்கு திடீரென கொரோனா அறிகுறி இருந்ததை அடுத்து அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் அவருக்கு பாசிட்டிவ் ரிசல்ட் வந்ததை அடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
மருத்துவர்களின் அறிவுரைப்படி சிகிச்சை பெற்று வந்த தமன்னா தற்போது பூரண நலம் பெற்று வீடு திரும்பியுள்ளார். இதுகுறித்து அவரே சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இந்த பதிவில் அவர் கூறியுள்ளதாவது, "நானும் எனது படக்குழுவினர்களும் தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளில் இருந்தபோதிலும், துரதிர்ஷ்டவசமாக கடந்த வாரம் லேசான காய்ச்சலுக்கு ஆளானேன். அப்போது கொரோனா சோதனைகளை மேற்கொண்டபோது நான் கோவிட் -19 பாசிட்டிவ் என கண்டறியப்பட்டேன். இதனால் ஹைதராபாத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டேன். சுகாதார அதிகாரிகள் மற்றும் மருத்துவ நிபுணர்களின் பராமரிப்பில் இருந்த நான் தற்போது குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளேன்’ என்று கூறியுள்ளார்.
டிஸ்சார் செய்யப்பட்டாலும் சில தினங்கள் தனிமையில் இருக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளார்.
தற்போது கொரோனாவில் இருந்து மீண்டு வந்த, அழகு தேவதை தமன்னாவிற்கு தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

Latest Videos

click me!