Diwali Release Movies : தீபாவளி பண்டிகைக்கு இன்னும் இரண்டு மாதங்களே உள்ள நிலையில், தற்போது அதற்கு ரிலீஸ் ஆகும் படங்கள் ஒவ்வொன்றாக அறிவிக்கப்பட்டு வருகின்றன. அதைப்பற்றி பார்க்கலாம்.
தீபாவளி பண்டிகைக்கு புத்தாடைகளும், பட்டாசும் எவ்வளவு ஸ்பெஷலோ அதே அளவு அன்றைய தினம் ரிலீஸ் ஆகும் புதுப் படங்களுக்கும் செம மவுசு இருக்கும். அதன் காரணமாகவே தீபாவளிக்கு ஏராளமான படங்கள் தியேட்டரில் ரிலீஸ் ஆகும். அந்த வகையில் இந்த ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு இன்னும் இரண்டு மாதங்கள் இருந்தாலும், அதற்கு ரிலீஸ் ஆகும் படங்கள் குறித்த அறிவிப்புகள் ஒவ்வொன்றாக வரத் தொடங்கி உள்ளன. அது எந்தெந்த படங்கள், அதில் நடித்த நடிகர், நடிகைகள் யார்... யார் என்பதை விரிவாக பார்க்கலாம்.
25
சீன்
இந்த ஆண்டு தீபாவளி ரேஸில் முதல் ஆளாக நுழைந்த நடிகர் என்றால் அது சூர்யா தான். அவர் நடித்துள்ள சீன் என்கிற திரைப்படம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது. அப்படத்தில் சூர்யா போலீஸாக நடித்துள்ளார். அப்படத்தை ஜீது மாதவன் இயக்கி உள்ளார். மலையாள இயக்குனரான இவர் அங்கு அடிபொலி ஹிட் அடித்த ஆவேசம் படத்தை இயக்கியவர் ஆவார். அப்படத்தின் வெற்றிக்கு பின் அவர் இயக்கும் படம் என்பதால் இதற்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. இப்படத்தில் சூர்யா உடன் நஸ்ரியா, ராஜ்பிரியன், நஸ்லின் ஆகியோர் நடித்துள்ளனர்.
தீபாவளி ரேஸில் களமிறங்கும் மற்றொரு பிரம்மாண்ட திரைப்படம் இராமாயணா. இப்படத்தில் ரன்பீர் கபூர் இராமனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக சீதை கதாபாத்திரத்தில் சாய் பல்லவி நடிக்கிறார். மேலும் இராவணன் கதாபாத்திரத்தில் கன்னட நடிகர் யாஷ் நடித்துள்ளார். இரண்டு பாகங்களாக இப்படத்தை வெளியிட உள்ளனர். இப்படத்தின் முதல் பாகம் வருகிற நவம்பர் மாதம் தீபாவளி பண்டிகைக்கு திரைக்கு வர உள்ளது. இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து உள்ளார். இப்படத்தில் நடிகை காஜல் அகர்வாலும் நடிக்கிறார். இது தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் என பான் இந்தியா படமாக ரிலீஸ் ஆக உள்ளது.
தீபாவளி ரேஸில் குதிக்க காத்திருக்கும் மற்றொரு திரைப்படம் மூக்குத்தி அம்மன் 2. இப்படத்தின் முதல் பாகம் மாபெரும் ஹிட் அடித்த நிலையில், அதன் இரண்டாம் பாகத்தை சுமார் 100 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாக்கி உள்ளனர். இப்படத்திலும் நயன்தாரா தான் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இப்படத்தை சுந்தர் சி இயக்கி உள்ளார். இப்படத்திற்கு ஹிப்ஹாப் ஆதி இசையமைக்கிறார். இப்படத்தில் இனியா, துனியா விஜய் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படமும் இந்த ஆண்டு தீபாவளி ரேஸை டார்கெட் வைத்துள்ளது.
55
மூன் வாக்
பிரபு தேவா நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி உள்ள திரைப்படம் மூன் வாக். இப்படத்திற்கும் ஏ.ஆர்.ரகுமான் தான் இசையமைத்து உள்ளார். மனோஜ் இயக்கியுள்ள இப்படத்தில் பிரபுதேவா உடன் யோகிபாபுவும் நடித்துள்ளார். இப்படத்தின் மூலம் பிரபுதேவாவும், ஏ.ஆர்.ரகுமானும் 30 ஆண்டுகளுக்கு பின் இணைந்து பணியாற்றுகின்றனர். இப்படத்தின் பாடல்களும் ரிலீஸ் ஆகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படமும் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.