நடிகர் சூர்யா நடிப்பில் நவம்பர் 14ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியான 'கங்குவா' திரைப்படத்தின் திட்டமிடப்பட்ட தேதிக்கு முன்பே ஓடிடியில் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் சூர்யா. சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான திரைப்படம் தான் கங்குவா. டைம் டிராவல் சயின்ஸ் பிக்சன் திரைப்படமாக எடுக்கப்பட்ட இந்த படத்தில், சூர்யா பல கெட்டப்புகளில் நடித்து ரசிகர்களை மிரளவைத்தார். ஆனால் கதையை எடுத்துச் சென்ற விதம் மற்றும் கதையில் ஏற்பட்ட தொய்வு தான் இந்த படத்தின் தோல்விக்கு காரணமாக அமைந்தது.
25
Siruthai siva and Suriya Movie
ஏற்கனவே 'தங்கலான்' படத்தின் தோல்வி தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவை அசைத்து பார்த்த நிலையில், கங்குவாவின் தோல்வி தலையில் இடியை. ரிலீசுக்கு முன்பே 1000 கோடி 2000 கோடி வசூல் செய்யும் என சூர்யா முதல் இயக்குனர் சிவா, தயாரிப்பாளர் என வாயிக்கு வந்ததை அளந்து விட்ட நிலையில்... போட்ட பணத்தை கூட எடுக்க முடியாமல் தோல்வியில் துவண்டது கங்குவா.
திரைபடத்தை மிஞ்சிய விமர்சனத்திற்கு ஆளானது இந்த படத்தின் பின்னணி இசை தான். DSP தெலுங்கு படங்களில் பட்டையை கிளம்பினாலும்... தமிழுக்கு ஒர வஞ்சனை செய்து விட்டாரோ என்றே நினைக்க தோன்றியது. காரணம் திரைப்படங்களை பார்க்க விடாமல் காதுக்கும் ரீங்காரம் பாடி டிஸ்டப் செய்தது இரைச்சல். இதற்க்கு சப்பை கட்டு காட்டும் விதத்தில், இயக்குனர் ஞானவேல் ராஜா திரையரங்குகள் வால்யூமில் இரண்டு பாய்ண்ட் குறைக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்.
45
Actor Suriya starrer Kanguva OTT Announcement
எப்படியும் 'கங்குவாவை' தட்டி எழுப்பி ஓட வைத்துவிடலாம் என, சூர்யா கணக்கு போட்டு மனைவி ஜோதிகாவை களத்தில் இறக்கி ரிவியூ செய்ய வைத்த போதும்... ஒன்னும் வேலைக்கு ஆகவில்லை. இந்நிலையில், இந்த படத்தின் தோல்வி எதிரொலியாக, திட்டமிடப்பட்ட தேதிக்கு முன்பே 'கங்குவா' ஓடிடியில் ரிலீஸ் ஆக உள்ளது.
இதுகுறித்து அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் புதிய போஸ்டருடன் அறிவிப்புவெளியாகியுள்ளது . அதன்படி ஹிந்தி மொழியை தவிர தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் ரிலீஸ் ஆக உள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.