'பூவெல்லாம் கேட்டுப்பார்' படத்தில் நடித்த போது, நண்பர்களாக மட்டுமே இருந்த சூர்யா ஜோதிகா பின் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.
27
இந்த ஜோடிகளின் கெமிஸ்ட்ரி ரசிகர்களுக்கு பிடித்து விட்டதால், தொடர்ந்து மாயாவி, பேரழகன், காக்க காக்க, சில்லுனு ஒரு காதல் என பல படங்களில் நடித்தனர்.
37
கிட்ட தட்ட நான்கு வருடங்கள் காதலித்து, பெற்றோர் சம்மதம் பெற்று, கடந்த 2006-ம் ஆண்டு இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.
47
நடிகர் சூர்யா தன்னுடைய நடிப்பு திறமையை பல படங்களில் வெளிக்காட்டி இருந்தாலும், அவரை ஒரு ஆக்ஷன் ஹீரோவாக பார்க்க வைத்தது காக்க காக்க திரைப்படம். இந்த படத்தில் அன்புசெல்வன் - மாயாவாக ரீல் காதல் ஜோடிகளாக மட்டும் இல்லாமல் ரியல் காதலர்களாகவே வாழ்ந்து நடித்தனர்
57
இந்தப்படத்தை தொடர்ந்து, இவர்கள் இணைந்து நடித்த மற்றொரு பேவரட் படம் என்றால் அது சில்லுனு ஒரு காதல். சூர்யாவும், ஜோதிகாவும் கடைசியாக இணைந்து நடித்த படமும் இதுதான்.
67
அதன்பின் ஜோதிகாவும், சூர்யாவும் இணைந்து நடிக்கவில்லை என்றாலும், அவர்கள் இருவரும் இணைந்து 2டி என்கிற பட நிறுவனத்தை தொடங்கி, தொடர்ந்து பல்வேறு தரமான படங்களை தயாரித்து வருகின்றனர்.
77
இந்நிலையில், தற்போது மும்பை சென்றுள்ள சூர்யாவும், ஜோதிகாவும் அங்குள்ள சாலையில் ஜோடியாக வாக்கிங் சென்றபோது எடுத்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றன.