'பூவெல்லாம் கேட்டுப்பார்' படத்தில் நடித்த போது, நண்பர்களாக இருந்த சூர்யா, ஜோதிகா பின் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இந்த ஜோடிகளின் கெமிஸ்ட்ரி ரசிகர்களுக்கு பிடித்து விட்டதால், தொடர்ந்து மாயாவி, பேரழகன், காக்க காக்க, சில்லுனு ஒரு காதல் என பல படங்களில் நடித்தனர். கிட்ட தட்ட நான்கு வருடங்கள் காதலித்து, பெற்றோர் சம்மதம் பெற்று, கடந்த 2006-ம் ஆண்டு இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.