கஜினி ரகசியம்: 12 முன்னணி நடிகர்கள் நிராகரித்த கனவுக்கதை!

First Published | Aug 16, 2024, 11:25 AM IST

தமிழ் சினிமாவின் மெகா ஹிட் படங்களில் ஒன்றான கஜினி, ஆரம்பத்தில் சூர்யாவிற்காக எடுக்கப்படவில்லை. 12 முன்னணி நடிகர்கள் இந்த படத்தில் நடிக்க மறுத்த பின்னரே சூர்யாவுக்கு வாய்ப்பு கிடைத்தது.

Suriya

கஜினி சூர்யாவுக்கான படமே இல்ல. அஜித், மாதவன், மகேஷ் பாபு என்று 12 நடிகர்கள் நடிப்பதற்கு மறுக்கப்பட்ட படத்தில் கஜினியாக வாழ்ந்து படத்தையும் ஹிட்டாக்கி கொடுத்திருக்கிறார் நடிகர் சூர்யா. இயக்குநர் ஏஆர் முருகதாஸ் மற்றும் சூர்யா காம்பினேஷனில் திரைக்கு வந்து ஹிட் கொடுத்த படம் கஜினி. திரைக்கு வந்த ஒரு சில ஆண்டுகளுக்கு பிறகு இந்தப் படம் ஹிந்தியில் ரீமேக் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. இதில் அமீர் கான் நடித்திருந்தார். இந்த படம் ரூ.100 கோடி வசூல் குவித்து பாலிவுட்டில் அதிக வசூல் குவித்த படம் என்ற சாதனையை படைத்தது.

Suriya Ghajini Movie

தமிழில் சூர்யா நடிப்பதற்கு முன்னதாக 12 நடிகர்கள் இந்த படத்தை ரிஜக்ட் செய்துள்ளனர். ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் சூர்யா, அசின், பிரதீப் ராவத், நயன்தாரா ஆகியோரது நடிப்பில் கடந்த 2005 ஆம் ஆண்டு திரைக்கு வந்த படம் கஜினி. ஞாபக சக்தியை இழந்த சூர்யா, தனது காதலி அசினை கொலை செய்தவர்களை நயன்தாராவின் உதவியுடன் கண்டுபிடித்து பழிவாங்கும் கதையே கஜினி.

Tap to resize

Ghajini First Choice

இதில், மொட்டை தலை, உடல் முழுவதும் பெயரை எழுதி வைத்துக் கொண்டும் வித்தியாசமான ஒரு தோற்றத்தில் சூர்யா நடித்திருப்பார். இந்த ரோலுக்காக முதலில் நடிகர் அஜித், மாதவன், மகேஷ் பாபு ஆகியோரை அணுகியிருக்கிறார் இயக்குநர் முருகதாஸ். ஆனால், அவர்கள் எல்லாம் முடியாது என்று மறுக்கவே கடைசியில் 13ஆவது நடிகராக சூர்யாவிடம் சென்று ஓகே பண்ணி படத்தையும் வெற்றிகரமாக எடுத்து முடித்து வெளியிட்டு சக்சஸ் கொடுத்திருக்கிறார்.

Ghajini Suriya Movie

கிட்டத்தட்ட ரூ.7 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட கஜினி ரூ.50 கோடி வரையில் பாக்ஸ் ஆபிஸ் ஹிட் கொடுத்துள்ளது. இதே போன்று பாலிவுட்டில் ரூ.62 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட கஜினி உலகம் முழுவதும் 200 கோடி வரையில் வசூல் குவித்துள்ளதாக கூறப்படுகிறது.

Latest Videos

click me!