Suriya Gift to Naslen : சீன் பட வில்லன் நஸ்லெனுக்கு ஹீரோ சூர்யா கொடுத்த காஸ்ட்லி கிஃப்ட்... அதன் விலை எவ்வளவு தெரியுமா?

Published : Nov 17, 2026, 09:26 PM IST

Suriya Expensive Gift to Naslen : சீன் படத்தில் வில்லனாக நடித்த நஸ்லெனுக்கு நடிகர் சூர்யா விலையுயர்ந்த கிஃப்ட் ஒன்றை கொடுத்துள்ளார். அது என்ன என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

PREV
14
சீன் பட வில்லன் நஸ்லென்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் சூர்யா, நடிப்பைத் தாண்டி சக கலைஞர்களிடம் அன்பாகப் பழகுவதற்கும் பெயர் பெற்றவர். அந்த வகையில், சமீபத்தில் வெளியான 'சீன்' திரைப்படத்தில் தன்னுடன் நடித்த மலையாள இளம் நடிகர் நஸ்லெனுக்கு அவர் கொடுத்துள்ள பரிசு தற்போது பேசுபொருளாகியுள்ளது.

மலையாள இயக்குநர் ஜீத்து மாதவன் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள 'சீன்' திரைப்படம் நவம்பர் 6-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இந்த ஆண்டில் ஏற்கனவே 'கருப்பு', 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' என அடுத்தடுத்த வெற்றிகளைப் பெற்ற சூர்யாவுக்கு, இந்தப் படமும் முக்கியமான படமாக அமைந்துள்ளது. உலகளவில் இப்படம் ரூ.250 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்தப் படத்தில் சூர்யா மட்டுமின்றி மற்ற நடிகர்களின் நடிப்பும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. குறிப்பாக, நீண்ட இடைவெளிக்குப் பிறகு நஸ்ரியா தமிழில் மீண்டும் நடித்துள்ளார். அதேபோல், மலையாள இளம் நடிகர் நஸ்லெனும் இப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளார்.

ஏற்கனவே 'பிரேமலு' படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமான நஸ்லென், 'சீன்' திரைப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளார். சூர்யாவுக்கு இணையாகத் தனது நடிப்பை வெளிப்படுத்திய அவரது கதாபாத்திரம் ரசிகர்களிடையே பாராட்டுகளைப் பெற்று வருகிறது.

24
நஸ்லெனுக்கு சூர்யா கொடுத்த ஸ்பெஷல் கிஃப்ட்!

இந்நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் நஸ்லென் சூர்யாவுடன் தனக்கு ஏற்பட்ட மறக்க முடியாத அனுபவம் ஒன்றைப் பகிர்ந்துள்ளார். அதாவது, சூர்யா தனக்கு விலையுயர்ந்த கைக்கடிகாரம் ஒன்றைப் பரிசாக வழங்கியதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பேசிய நஸ்லென், தனக்கு எப்போதுமே தரமான வாட்ச் அணிய வேண்டும், நல்ல ஷூக்களைப் பயன்படுத்த வேண்டும், ஸ்டைலாக உடை அணிய வேண்டும் என்ற ஆசை இருந்ததாகக் கூறியுள்ளார். அந்த ஆசையை நிறைவேற்றும் வகையில் சூர்யா அண்ணா தனக்கு இந்த வாட்சைப் பரிசாக வழங்கியதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், இந்தப் பரிசைப் பற்றி ஏதாவது ஒரு மேடையில் பேச வேண்டும் என்று நீண்ட நாட்களாக நினைத்துக் கொண்டிருந்ததாகவும், தற்போது பேட்டியில் அதுகுறித்து கேள்வி எழுந்தது சரியான தருணமாக அமைந்ததாகவும் மகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.

34
வாட்சின் விலை மட்டும் இத்தனை லட்சமா?

சூர்யா நஸ்லெனுக்கு வழங்கியிருப்பது உலகப் புகழ்பெற்ற ஆடம்பர கைக்கடிகார பிராண்டான கார்டியர் நிறுவனத்தின் வாட்ச் என்று கூறப்படுகிறது. இந்த பிராண்டின் மாடல்களைப் பொறுத்து அதன் விலை சுமார் ரூ.4 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை இருக்கலாம்.

இதனால் சூர்யா வழங்கிய பரிசு குறித்த தகவல் ரசிகர்களின் கவனத்தை மேலும் ஈர்த்துள்ளது. சக நடிகரின் ஆசையைப் புரிந்துகொண்டு அவர் அளித்த இந்தப் பரிசு, இருவருக்கும் இடையிலான நட்பையும் அன்பையும் வெளிப்படுத்துவதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

44
யார் இந்த நஸ்லென்?

மலையாளத் திரையுலகில் வளர்ந்து வரும் இளம் நடிகர்களில் முக்கியமானவர் நஸ்லென். கடந்த 2019-ம் ஆண்டு வெளியான 'தண்ணீர் மாதன் தினங்கள்' திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். அதன்பிறகு 'குருதி', 'சூப்பர் சரண்யா', 'ஹோம்', 'ஜோ அண்ட் ஜோ', 'நெய்மர்' உள்ளிட்ட பல படங்களில் நடித்து தனது திறமையை வெளிப்படுத்தினார்.

கிரிஷ் ஏ.டி. இயக்கத்தில் வெளியான 'பிரேமலு' திரைப்படத்தில் சச்சின் கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் தென்னிந்திய அளவில் பிரபலமானார். தொடர்ந்து 'அலப்புழா ஜிம்கானா', 'லோகா: சாப்டர் 1 - சந்திரா' உள்ளிட்ட படங்களிலும் நடித்து கவனம் பெற்றுள்ளார்.

தற்போது 'சீன்' படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களிடமும் வரவேற்பைப் பெற்றுள்ள நஸ்லெனுக்கு, சூர்யா வழங்கியுள்ள இந்த வாட்ச் பரிசு அவரது திரைப்பயணத்தில் மறக்க முடியாத நினைவாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Photos on
click me!

Recommended Stories